விவசாயத்துறை அமைச்சகம்

கால்நடை இனங்களை மேம்படுத்துதல்

Posted On: 01 AUG 2017 5:20PM by PIB Chennai

கடந்த மூன்று ஆண்டுகளில் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6.27 சதவீதம் உயர்ந்தது.  கடந்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவீதம் உயர்ந்தது.

      2012 ஆம் ஆண்டு விலங்கினக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாட்டில் 3 கோடியே 79 லட்சத்து 20,000 உள்நாட்டுக் கால்நடை இனங்கள் இருந்தன. 2007 ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்படி, கால்நடைகளின் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 80,000 உள்நாட்டு கால்நடை இனங்கள் இருந்தன. 

      மாநிலங்கள், உள்நாட்டு கால்நடை இனங்களை பாதுகாத்துப் பராமரிக்கும் நடவடிக்கைகளை முழுமைப்படுத்தி உதவுவதற்கு மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் அக்கறையுள்ள அனைவருடனும் விரிவான ஆலோசனைகளை அடுத்து, கீழ்கண்ட திட்டங்களை தொடங்கியுள்ளது. i) தேசிய கோகுல இயக்கம் II) கால்நடை உற்பத்தித் திறனுக்கான தேசிய இயக்கம் III) தேசிய பால்பண்ணைத் திட்டம்–1 iv) கால்நடை இன மேம்பாட்டு நிறுவனங்கள் திட்டம்.

        உள்நாட்டுக் கால்நடை இனங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, மத்திய அரசின் தேசிய கோகுல திட்டம். நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் பால் உற்பத்தி மற்றும் கால்நடைகளின் உற்பத்தி திறன் மேம்பாடு ஆகியவற்றை உயர்த்த உருவாக்கப்பட்டது கால்நடை உற்பத்தித் திறன் தேசிய இயக்கத்திட்டம்.

       நாட்டில் கால்நடை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  1. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய கோகுல இயக்கம் தொடங்கப்பட்டது. உள்நாட்டு கால்நடை இனங்களைப் பராமரித்து மேம்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயர்த்தவும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. உயர் மரபணுத் தரமுள்ள காளைகளில் விந்து உற்பத்தி அதிகரிப்பு, களச் செயல்பாடு பதிவுகள், காளைகளின் தாய்ப்பண்ணைகளை வலுப்படுத்துதல், கோகுல கிராமங்களை அமைத்தல் ஆகியவற்றின்மூலம் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துவது இத்திட்டத்தின் குறிக்கோள்.
  2. தேசிய கால்நடை இனப்பெருக்க திட்டம், கறவை மாடுகளில் செயற்கை கரூவூட்டல் முறையை விரிவாக்குவதன்மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.  பலநோக்க செயற்கை கரூவூட்டல் தொழில்நுட்பாளர்களை கிராமப்பகுதிகளில் நியமிப்பது, தற்போதுள்ள செயற்கை கரூவூட்டல் மையங்களை வலுப்படுத்துவது, செயற்கை கரூவூட்டல் நடைமுறையை கண்காணிப்பது ஆகியவற்றின் மூலம் திட்ட நோக்கம் நிறைவேற்றப்படுகிறது.
  3. தேசிய கால்நடை உற்பத்தித் திறன் இயக்கம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  பால் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தி அதன்மூலம் பால்பண்ணைத் தொழிலை விவசாயிகளுக்கு லாபகரமானதாக மாற்றுவதற்கு இத்திட்டம் உருவானது.  கீழ்கண்ட பகுதிகளுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. a) பசு சஞ்ஜீவினி - இந்தப் பகுதி திட்டத்தின் கீழ் UID மூலம் கால்நடைகளை அடையாளப்படுத்துவது, பால்தரும் அனைத்து கால்நடைகளுக்கும் சுகாதார அட்டைகள் வழங்குவது மற்றும் இதுகுறித்த தகவல்களை INAPH தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது. b) மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்க தொழில்நுட்பம் – இந்தப் பகுதி திட்டத்தின்கீழ், இனம் பாகுபடுத்தப்பட்ட விந்து உற்பத்தி வசதியை A தரமுள்ள 10 விந்து நிலையங்களில் உருவாக்குதல் மற்றும் நாட்டில் IVF வசதியுடன் கூடிய 50 கருமாற்று தொழில்நுட்ப சோதனைக் கூடங்களை அமைத்தல். c) மின்னணு பசு ஹாட் வலைதளம் உருவாக்குதல் – இந்த வலைதளம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.   விவசாயிகளையும், உள்நாட்டு கால்நடை இனங்களை பெருக்குபவர்களையும் இணைப்பதற்காக இந்த வலைதளம் ஏற்படுத்தப்பட்டது. d) உள்நாட்டு இனங்களுக்கான தேசிய கால்நடை மரபணு மையம் உருவாக்குதல் – இந்த மையம் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை உள்நாட்டு கால்நடை இனங்களிடையே மரபணு தெரிவு முறையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  4.  வடக்கு மண்டலத்துக்கு மத்தியப் பிரதேசத்திலும், தெற்கு மண்டலத்துக்கு ஆந்திரப் பிரதேசத்திலும் ஆக இரண்டு தேசிய காமதேனு இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு கால்நடை இனங்களை அறிவியல் முறையில் பாதுகாத்து மேம்படுத்தி அதன்மூலம் பால் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் உயர்த்துதல் இதன் நோக்கமாகும்.
  5. தேசிய பால்பண்ணை திட்டம்-I: இந்த உலகவங்கி  உதவியுடனான திட்டம் 18 பெரிய பால்பண்ணை மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.  நாட்டின் பால் தேவையை சமாளிக்கும் வகையில் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விந்து நிலையங்களை வலுப்படுத்துதல், காளை மாடு உற்பத்தித் திட்டம் (மரபு சோதனை இனத்தெரிவு), சமநிலைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.
  6. அரசு கீழ்கண்ட மூன்று துணை அமைப்புகளை ஏற்படுத்தயுள்ளது. (i) மத்திய கால்நடை இனப்பெருக்கப் பண்ணை (ii) மத்திய கால்நடை மந்தைப் பதிவுத்திட்டம் (iii) மத்திய உறையவைக்கப்பட்ட விந்து உற்பத்தி மற்றும் பயிற்சி நிறுவனம். இந்த அமைப்புகள் பால் தரும் கால்நடைகளின் மரபு மேம்பாட்டை உறுதிசெய்கின்றன.  விந்து உற்பத்திக்கென மரபணுத் தரமான, நோயற்ற காளைகளை வழங்குதல், இனப்பெருக்கத் திட்டங்களில் இயற்கைச் சேவைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்தத் தர உயர்வினை அடைய மாநிலங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

இந்தத் தகவலை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணையமைச்சர் திரு சுதர்சன் பகத் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

 



(Release ID: 1499211) Visitor Counter : 234


Read this release in: English