விவசாயத்துறை அமைச்சகம்

குளிர்பதன தொடர் நிலையங்கள் மேம்பாடு

Posted On: 01 AUG 2017 5:24PM by PIB Chennai

அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்ளிட்ட தோட்டக்கலை மேம்பாட்டுக்கென ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் சிப்பம் கட்டும் இல்லம், குளிர்பதனத்துக்கு முந்தைய பிரிவு, குளிர்பதன அறைகள், குளிர்பதன சேமிப்பு இடம், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை சேமிப்பகம், ரீஃபர்  தகடுகள் அமைத்தல், தொடக்கநிலை / நடமாடும் பதனீட்டு பிரிவுகள், பழுக்கவைக்கும் அறைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட அடிப்படை வசதிகளை அமைக்க உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருள்களுக்கு நல்ல விலைகளை பெறும் வகையில் சந்தை வசதி ஏற்படுத்துதல் மற்றும்  மொத்த வழங்குதல் சங்கிலி தொடரில், இழப்புகளைக் குறைத்து போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது.

      இந்த இயக்கத்தின் முக்கிய பகுதிப் பொருள், தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், விவசாய குழுக்கள் போன்றவற்றின் தொழில்முனைவு அல்லது தேவை அடிப்படையில் அமைகிறது. இந்த முக்கியப் பகுதி நடவடிக்கை, வர்த்தக நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கென பொது பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட திட்ட செலவினத்தில் 35 சதவீத உதவியும், குன்று மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் 50 சதவீத உதவியும் வழங்கப்படுகிறது.  இந்த உதவித்தொகை கடனுடன் இணைந்த பின்னிணைப்பு மானிய அடிப்படையில் வழங்கப்படுகிறது.

      ஆண்டு செயல்திட்ட அடிப்படையில், இந்த ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் ஒதுக்கீடுகள், மாநில வாரியாக செய்யப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ் குளிர் தொடர் நிலைய மேம்பாடு உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மையை உருவாக்க, மாநிலங்கள் 35 முதல் 40 சதவீதம் வரையிலான ஒதுக்கீடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.  நடப்பு நிதியாண்டில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்த இயக்கத்தின் கீழ், குளிர் தொடர் நிலையங்கள் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய அடிப்படை வசதி மேம்பாட்டுக்கென ரூபாய் 5135 லட்சம் உட்பட ரூபாய் 14,829 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

      மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த்த் தகவலை தெரிவித்துள்ளார்



(Release ID: 1499207) Visitor Counter : 244


Read this release in: English