நிதி அமைச்சகம்

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் உயர்வு

Posted On: 01 AUG 2017 7:12PM by PIB Chennai

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. 9.11.2016 முதல் 31.03.2017 வரை ஒரு கோடியே 96 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சென்ற ஆண்டு இதேகாலத்தில் ஒரு கோடியே 63 லட்சம் வருமான வரி கணக்குகளும் அதற்கும் முந்தைய ஆண்டு ஒரு கோடியே 23 லட்சம் வருமான வரி கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

      பண மதிப்பிழப்பு நடவடிக்கை புதிய இயல்பு தரங்களை உருவாக்கியுள்ளது. இதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரியதாகவும், தூய்மையானதாகவும், உண்மையானதாகவும் அமையும்.  இந்த நடவடிக்கை ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டு, பயங்கரவாத்த்திற்கு நிதி வழங்குதல் ஆகியவற்றை ஒழிக்க  அரசு மேற்கொண்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. 

      இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு சந்தோஷ்குமார் கங்குவார் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.



(Release ID: 1499201) Visitor Counter : 73


Read this release in: English