உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமானக் கட்டணங்களில் ஜிஎஸ்டியின் தாக்கம்

Posted On: 01 AUG 2017 5:46PM by PIB Chennai

ஜிஎஸ்டி வரிமுறைத் திட்டத்தின்படி எக்னாமி வகுப்பு விமான பயணியர் கட்டணத்தின் மீது விதிக்கப்படும் வரி வீதம் 6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. (சரக்குகளுக்கு கணக்கில் சேர்க்கப்படமாட்டாது) வர்த்தக வகுப்பு மற்றும் முதல் வகுப்பு விமான கட்டணங்கள் மீது இந்த வரி 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. (விமான நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதலில் உள்வரவு வரி, கணக்கில் சேர்க்கப்படும்) உடான் திட்டத்தைப் பொறுத்தவரை வரி வீதம் கட்டணத்தில் பயணியர் செலுத்தும் மதிப்புக்கு மட்டும் 5 சதவீதமாக இருக்கும். (சரக்குகளுக்கு கணக்கில் சேர்க்கப்படமாட்டாது). மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியத் தொகைகள் வரி கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மண்டல இணைப்பு திட்டத்தின் (RCS) இருக்கைகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் உரிய ஜிஎஸ்டியையும் கணக்கில் கொண்டது. இந்த வரி விமான நிறுவனங்களுக்கு மண்டல இணைப்பு நிதியிலிருந்து திருப்பியளிக்கப்படும்.  இதனையடுத்து, RCS இருக்கைகளுக்கு பயணியர் செலுத்தும் கட்டணங்களில் தாக்கம் எதும் இராது.  

இந்தத் தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். 



(Release ID: 1499195) Visitor Counter : 89


Read this release in: English