உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஏர்இந்தியா நிறுவனத்தில் நஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கைகள்

Posted On: 01 AUG 2017 7:57PM by PIB Chennai

ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் நிதி திருப்புமுனையை அடைவதற்கான திருப்புமுனை திட்டம் / நிதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத்திட்டத்தின்படி  2021 ஆம் ஆண்டு வரை ரூ. 30,231 கோடி  பங்கு மூலதனத்தை (சில இலக்குகளை அடையும் நிபந்தனைக்கு உட்பட்டு) பெற வகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் இலக்குகளின்படி செயல்பாட்டு மற்றும் நிதித்துறைகளில் இந்த நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. திருப்புமுனை இலக்கை அடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஏர்இநதியா நிறுவனம் செலவினங்களையும், நஷ்டங்களையும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.  கீழ்கண்டவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்:

  1. ஏர்இந்தியா மற்றும் இண்டியன் ஏர்லைன்ஸ் முந்தைய வழித்தடங்களை காரண காரியப்படி மாற்றியமைத்தல் மற்றும் ஒரே மாதிரியான இணைச் செயல்பாடுகளை வழித்தட கட்டமைப்பிலிருந்து நீக்கிவிடுதல்
  2. சில நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்கலை மாற்றியமைப்பது
  3. புதிய விமானங்களின் பயன்பாட்டை உயர்த்தி கிடைக்கும் இருக்கை கிலோமீட்டர்கள்(ASKMs)  அளவை பெருக்குதல்

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர் இந்தியா படிப்படியான சந்தை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கீழ்கண்டவை அவற்றில் அடங்கும்.

  1. புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல்
  2. உள்நாட்டு வெளிநாட்டு வழித்தடங்களில் விரும்பிய இருக்கைத் தேர்வு
  3. வருவாயை உயர்த்துவதற்கும் பயணியர் எடைக்காரணியைப் (PLF) பெருக்குவதற்கும் இருக்கைகளை உடனுக்குடன் விற்பனை செய்தல்
  4. விற்பனையாகாத பொருட்களை பயன்படுத்துதல் / தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் விமான கட்டணத்தை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு கட்டணத்திற்கு இணையாக மாற்றியமைத்தல்
  5. மாறி அமையும் விலை முறையை அமல்படுத்துதல் மற்றும் முன்கூட்டியே வாங்கும் கட்டணத் திட்டம் அறிமுகம் செய்தல்
  6. பல்வேறு விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகள்

இந்தத் தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

     



(Release ID: 1499192) Visitor Counter : 108


Read this release in: English