பிரதமர் அலுவலகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து தியாகிகளுக்கும் பிரதமர் வீர வணக்கம்; 2022ல் `புதிய இந்தியா’வை உருவாக்க மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் - பிரதமர் வலியுறுத்தல்
Posted On:
09 AUG 2017 10:34AM by PIB Chennai
`வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி இந்த இயக்கத்தில் பங்கேற்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வீரவணக்கம் செலுத்தியுள்ளார். 2022-ஆம் ஆண்டில் `புதிய இந்தியா’வை உருவாக்குவதற்கு உறுதிமொழி ஏற்குமாறு பிரதமர் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
”வரலாற்று சிறப்புமிக்க `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து இருபாலர் தியாகிகளுக்கும் இந்த இயக்கத்தின் 75ஆம் ஆண்டு விழாவில் நாம் வீர வணக்கம் செலுத்துகிறோம்.
நாட்டின் விடுதலைக்காக, மகாத்மா காந்தியின் தலைமையில் மொத்த தேசமும் ஒன்று திரண்டது.
1942ல் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைவதே முக்கிய நோக்கமாக இருந்தது. இன்று, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது பிரச்சினைகள் வேறாக உள்ளன.
வறுமை, மாசு, ஊழல், பயங்கரவாதம், சாதியம், மதவாதம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்.
நமது விடுதலைப் போராட்ட தியாகிகள் பெருமைப்படும் வண்ணம் புதிய இந்தியாவை உருவாக்க, தோளோடு தோளாக ஒன்றிணைந்து உழைப்போம். #SankalpSeSiddhi (உறுதியேற்போம் சாதிப்போம்) ” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1499007)
Visitor Counter : 96