மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மதிப்பெண்களைக் கூட்டுதல்
Posted On:
17 JUL 2017 4:07PM by PIB Chennai
மதிப்பெண்களைக் கூட்டுதல் பற்றிய கொள்கை குறித்து மறுஆய்வு செய்யும் கூட்டம் ஒன்று மத்திய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் கற்றல் துறைச் செயலாளரால் மனிதவள மேம்பாட்டுத்துறையில், மாநில கல்வித்துறைச் செயலாளர்கள், மாநில கல்விவாரியங்களின் தலைவர்கள், மத்திய இடைநிலைக்கல்வி வாரியத் தலைவர் ஆகியோருடன் 2017 ஏப்ரல் 24 அன்று நடத்தப்பெற்றது.
இக்கூட்டத்தில் குஜராத், ஜம்மு -காஷ்மீர், கேரளா, தெலிங்கானா, சத்தீஷ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலக் கல்வி வாரியங்களின் தலைவர்களை உறுப்பினர் களாகவும், ஐ.சி.எஸ்.சி. யைத் தலைவராகவும் சி.பி.எஸ்.சி.யை அமைப்பாள ராகவும் கொண்ட கல்வி வாரியங்களுக்கிடையிலான பணிக்குழு (ஐபிடபிள்யு) வை அமைத்திட அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் முடிவு செய்தன.
கூடுதல் மதிப்பெண் வழங்குதல் சம்பந்தமாக கீழ்க்காணும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.:
1. கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை நிகழாண்டுமுதல் நிறுத்திட அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் முடிவு செய்தன. எனினும் கேரளாவுக்குமட்டும் தேவையானால் மாநில விதிகளில் உரிய திருத்தங்களைச் செய்யவும், அடுத்த ஆண்டு முதல் இதைக் கட்டாயம் செயல்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2. கீழ்நிலைகளில் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த கருணை மதிப்பெண்கள் வழங்கும் கொள்கையைத் தொடர்வதென்று அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் முடிவு செய்தன. இந்தக் கொள்கைமுடிவு வெளிப்படையாகத் தெரியும் வகையில் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. மதிப்பெண் சான்றிதழில் கருணை மதிப்பெண் தனியே தெரியுமாறு காட்டப்படவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
3. மதிப்பிடுதலில் இத்தகைய ஆலோசனை முறைகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் மத்திய அரசும் மாநிலஅரசுகளும் ஒருங்கிணைந்து நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்திட எடுத்துள்ள முன்முயற்சிகளுக்கு அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும் பாராட்டு தெரிவித்தன.
இத்தகவலை இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்து வடிவில் அளித்த பதிலில் மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு. உபேந்திரா குஷ்வாஹா தெரிவித்தார்.
*****
(Release ID: 1498999)
Visitor Counter : 75