சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையின மாணவர்களுக்கு நேரடி நல மாற்ற முறைப்படி உதவித்தொகை வழங்குதல் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு நேரடி நல மாற்ற (நே. ந. மா ) முறைப்படி தேசிய உதவித்தொகை முகப்பு (தே. உ. மு.) மூலமாகக் நிதி உதவி வழங்கப் படுகிறதால் கீழ்க்கண்ட நலன்கள் இலக்கு பயனீட்டாளர்கள் உள்ளிட்ட எல்லா உரிமையுடையவர்களுக்கும் சென்றடையும் நிலையைப்பெற்றிருக்கின்றன.

Posted On: 19 JUL 2017 3:39PM by PIB Chennai

அ) மாணவர்களுக்கு நேரடியாக காலத்தில் தொல்லையற்ற வகையில் உதவித்தொகை வழங்கல்

ஆ)நேர்மை மற்றும் வெளிப்படையான முறையில் உதவித்தொகைவழங்கல்

இ) உதவித்தொகை உண்மையான பயனீட்டளர்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

ஈ) வழங்கப்பட்டவருக்கே மேலும் வழங்கப்படும் நிலையை நீக்குதல் மற்றும் அரசாங்க நிதியைத்தவறாக பயன்படுத்தும் நிலையை தவிர்த்தல்

உ)பயனீட்டாளர்களைப்பற்றிய விவரமான தரவுத்தளத்தை உருவாக்குதல்.

 

எந்த தொழில்நுட்ப ச்சிக்கல்/ இடர் எந்த உரிமையாளரால் சந்திக்கப்பட்டாலும் உதவித் தொகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய தகவல் மையத்தால் (தே. த. மை.) அமைக்கப்பட்டுள்ள தேசிய உதவித்தொகை முகப் பால் அது உடனே ஆய்வுசெய்யப்படும். உதவி மேசை மற்றும் உதவி எண் எல்லா உரிமையாளர்களின் தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களை உடனே களைவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. சிறு பான்மையோர் நல அமைச்சகம் சிறப்பான குறைநீக்கும் அமைப்பை இலக்கு பயனீட்டாளர் உள்ளிட்ட உரிமையாளரின் கவலைகளை கண்காணித்து நீக்குவதற்காக அமைத்திருக்கிறது. இந்தத்தகவல் மத்திய துனையமைச்சர் (பொ) சிறுபான்மையோர் நலம் திரு முக்தர் அப்பாஸ் நக்வியால் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துமூலம் அளிக்கப்பட்ட பதிலாக வழங்கப்பட்டுள்ளது.

***



(Release ID: 1498988) Visitor Counter : 52


Read this release in: English