சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மை இனப்பெண்களுக்கு வேலைவாய்ப்பு

Posted On: 19 JUL 2017 3:38PM by PIB Chennai

எல்லோருக்காகவும் உள்ள திட்டங்கள் அல்லாமல் சிறுபான்மையோர் நல அமைச்சகம் பெண்களுக்கான கீழ்க்கண்ட மூன்று குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது:

”புதிய ரோஷினி” சிறப்பாக அறிவிக்கப்பட்ட சிறுபான்மைச் சமுதாய, அதாவது இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய, புத்த, பாரசீக மற்றும் ஜைனப் பெண்களின் ஆளுமைத்திறன் வளர்ச்சியை பெண்களுக்கு அறிவு, கருவி மற்றும் அணுகுமுறை ஆகிய அளிப்பதின் மூலம் அரசாங்க அமைப்பு மற்றும் எல்லா நிலைகளிலும் உள்ள மற்றவை ஆகியவற்றுடன் கலந்துரையாடத் தேவையான உரிமையாற்றல் கொடுத்து மற்றும் சிறிது சிறிதாக நம்பிக்கையூட்டப் பயன்படுகிறது. இந்தத் திட்டம் குறிப்பிடப்பட்டுள்ள நாடுமுழுவதுமுள்ள அரசாங்கமற்ற நிறுவனங்கள் (என் ஜி ஓஸ்) மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2) பேகம் ஹசாரட் மஹால் தேசிய உதவித்தொகை சிறுபான்மையைச் சேர்ந்த திறமை சால் பெண்களுக்கு மௌலானா ஆசாத் கல்விஅமைப்பின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

(3) பெண்கள் நினைவகத் திட்டம் (மகிளா சம்ருதி யோஜனா) தேசிய சிறுபான்மை வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் (என் எம் டி ஃப் சி) மூலமாக பெண்கள் குழுக்களுக்கு பெண்களுக்கு ஏற்ற தொழில் முறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆறு மாத பயிற்சிகாலமாகக் கொண்ட இத்திட்டத்திற்கு ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ரூ. 1500 மதிப்புள்ள மூலப்பொருளும் ரூ. 1000 உதவித்தொகையாகவும் வழங்கப்படுகிறது. பயிற்சிக்காலத்தின் பொழுது பெண்கள் சுய உதவிக்குழு அமைத்து ஒவ்வொரு உறுப்பினருக்கும் நுண் வரவு ரூ 1 இலட்சம் வரை வளர்க்கப்பட்ட திறனை வருவாய் பெருக்கும் செயல்களில் பயனுக்குக்கொண்டு வருவதற்கேதுவாக வழங்கப்படும் வசதியுள்ளது.

சிறுபான்மை நலம் மத்தியத் துணையமைச்சர் (பொ) திரு முக்தர் அப்பாஸ் நக்வி பாராளுமன்றத்துக்கு எழுத்துமூலம் கேள்வியொன்றுக்கு இன்று அளித்த பதிலில் இத்தகவல் அளிக்கப்படுள்ளது.

 

***



(Release ID: 1498987) Visitor Counter : 212


Read this release in: English