ரெயில்வே அமைச்சகம்

இரயில்வேயில் புதிய உணவளிக்கும் கொள்கை

Posted On: 19 JUL 2017 3:45PM by PIB Chennai

27 பிப்ரவரி 2017 ல் இரயில் பயணிகளுக்கு தரமான உணவளிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய உணவளிக்கும் கொள்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய இரயில்வே உணவளித்தல் மற்றும் சுற்றுலா கூட்டவை லிமிடெட் (ஐ. ஆர். சி. டி. சி. ) உணவு தயாரித்தல் மற்றும் உணவு வழங்கல் ஆகிய இரண்டையும் தனித்தனியாகக் கொண்டு இயங்கும் உரிமைத் தன்மையுடன் இரயில்களில் உணவு வழங்கும் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. எல்லா நான்கு சமையற்கூடங்களும் பிராந்திய இரயில்வே துறைச் செயற்பாடுக்குக் கீழ் (நாக்பூர், சத்ரபதி சிவாஜி முனையம் (சி.எஸ்.இ.எம்), மத்திய மும்பை (பிசிடி) மற்றும் பாலர்ஷா) மற்றும் எல்லா சமையல் உருப்புக்களும், அதாவது, ஏ1 மற்றும் ஏ வகை இரயில் நிலையங்களில் உள்ள உணவூட்டும் அறைகள், ஜன் ஆகார், செல் சமயற்கூடங்கள் ஆகிய அனைத்தும் ஐ. ஆர். சி. டி. சியிடம் ‘எங்கே இருக்கிறதோ அங்கேயே என்ற அடிப்படையில்’ ஒப்படைக்கப்படும்.

 

உணவுச் சேவைகளைத் தரஉயர்வு செய்யும் நோக்கத்துடன் ஐ. ஆர். சி. டி. சி. புதிய சமயற்கூடங்களை அமைப்பதுடன் தற்போதுள்ள சமயற்கூடங்களை மேம்படுத்தவும் உள்ளது. இந்த சமயற்கூடங்கள் ஐ. ஆர்.சி.டி.சி. க்குச் சொந்தமானதோடு மட்டுமல்லாமல் நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படவும் உ ள்ளன. ஐ. ஆர். சி. டி.சி. இந்த சமயற்கூடங்களை தன் சொந்தப் பொறுப்பில் வைத்திருக்கும் மற்றும் அது கள சமயற்கூடங்களில் தயாராகும் உணவின் தரத்துக்கும் , அதன் செயற்பாட்டுக்கும் அதை அமைப்பது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றில் எழும் சிக்கல்களுக்கும் முழுப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டி வரும்.

முதல் நிலையில் உணவு அளிக்கும் சேவைகளை கட்டவிழ்க்கும் பணி டெல்லி-மும்பை பகுதியில் நடைமுறைப்படுத்த இருக்கிறது. சிஎஸ்டிஎம் மற்றும் பிசிடி ஆகியவற்றில் உள்ள தளச் சமையற்கூடங்கள் மற்றும் ஜன் ஆகார்கள் பிராந்திய இரல்வேயிடமிருந்து ஐ.ஆர்.சி.டி.சி. ஆல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

புதிய உணவளிக்கும் கொள்கை, பிற செய்திகளுக்கிடையில், ஐ.ஆர்.டி.சி. அனைத்து நடமாடும் பிரிவுகளிலும் உணவு வழங்கும் சேவைகளை மேலான்மை செய்யும். அவற்றிற்காண உணவு அதற்குச் சொந்தமான நடத்தப்படுகிற நிர்வகிக்கப்படுகிற குறிக்கப்பட்டுள்ள ஐ ஆர்டிசி சமயற்கூடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும். மேலும் ஐஆர்டிசி விருந்தோம்பும் தொழில் சார்ந்த சேவை அளிப்பவர்களை பயன்படுத்தி இரயில்களில் பிராந்திய சமயற்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட உணவு இந்திய இரயில்வே முழுவதிலும் வழங்கப்படுவற்கு ஏற்பாடு செய்யும்.

உணவு வழங்கும் கொள்கை 2017 க்கு இணங்க, உணவு வகைப் பட்டியல் மற்றும் உணவுப் பொருள்களின் விலை கீழ்க்கண்ட வாறு அமையும்: அ) இராஜதானி, ஷதாப்தி, டோரொண்டோ இரயில்கள் மற்றும் பயணக் கட்டணத்துடன் உணவுக் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ள இரயில்கள் ஆகியவற்றுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஆல் உணவு வகைப்பட்டியல் இரயில்வே கழகத்துடன் கலந்தாலோசித்து விலைக்கேற்ற படி இருக்குமாறு அமைக்கப்படும். ஆ) கட்டுப்படுத்தப்பட்ட பிரிவு உருப்படிகள்/ சாதாரண உணவுவகை/ ஜனதா சாப்பாடுகள் ஐ.ஆர்.டி.சி. யிடம் கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்கு, உணவுப்பட்டியல் ஐ.ஆர்.டி.சி. யால் பிராந்திய இரல்வேத் துறையுடன் கலந்தாலோசித்து இரல்வே கழகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிச்சயவிலைக்கு ஏற்றாற்போல் அமைக்கப்படும். உணவுப்பிளசா, உணவு முற்றம் மற்றும் விரைவு உணவு இடங்கள் ஆகிய வற்றுக்கான உணவுப் பட்டியல் மற்றும் விலை ஐ.ஆர்.டி.சி. ஆல் முடிவு செய்யப்படும்.

இந்தப் பத்திரிக்கைக் குறிப்பு மத்திய இரல்வே இணையமைச்சர் திரு ராஜன் கோஹைன் லோக்சபா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் 19-07- 2017 (புதன்கிழமை) யன்று அளித்த பதிலில் இருந்து பெறப்பட்டு உள்ளது.

 

 

 

****



(Release ID: 1498986) Visitor Counter : 66


Read this release in: English