ரெயில்வே அமைச்சகம்

இரயில்வேயில் சுத்தமான எரிபொருள் பயன்பாட்டு வளர்ச்சி

Posted On: 19 JUL 2017 3:51PM by PIB Chennai

சுத்தமான எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும் கரியமிலவாயு வெளிப்பாட்டைக் குறைக்கவும் இரயில்வே பின்வரும் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது:

அ) டீசல் வண்டிகளில் பி5 (5%உயிர்-டீசல்) கலவை உயிர் டீசல் பயன்படுத்துதல்.

ஆ) பொது இரயில் நேரடி செலுத்தும் அமைப்பு (சி. ஆர். இ. ட. இ) உருவாக்கம்.

இ) சுருக்கப்பட்ட இயற்கை வாயு (சி என் ஜி) சார்ந்த இரட்டை எரிபொருள் அமைப்பு டி.யு.எம்.யு. இரயில் வண்டிகளில் 20% டீசலுக்கு பதில் வாயுவைப் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்துதல்

ஈ) மில்லர் சுழற்சி சார்ந்த டர்போசார்ஜர்களை டீசல் வண்டிகளுக்காக அபிவிருத்திச் செய்தல்

உ) மாறுகின்ற ட்ர்பைன் வடிவ இயல் (விடிஜி) டர்போ சார்ஜர்களை டீசல் வண்டிகளுக்காக உற்பத்திச் செய்தல்

ஊ) டீசல் வண்டிகளுக்கு குளிர் வசதி வந்தவுடன் பெரிய உயர் விளைவு உற்பத்தி ஏற்படும்.

எ) சி என் ஜி சார்ந்த இரு எரிபொருள் அமைப்பு வளர்ச்சி 40% டீசலுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டால் உயர்ந்த சிக்கனத்துக்கும் சூழல் நலத்துக்கும் வழிவகுக்கும்

 

ஏ) இரண்டு டீசல் உற்பத்தி தொழிற்சாலைகளை ஒரு நாளைக்கு 30 டண் என்ற அளவில் அமைப்பதற்கான செயல் முறை

ஒ) இரயில்வண்டிகளுக்கு மெத்தனால் பயன்படுத்தும் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

ஓ) எல் என் ஜி / சி என் ஜி யை திரவ பெட்ரோலியம் வாயு (எல் பி ஜி) மற்றும் அசிடலின் வாயுக்குப் பதில் சூழல் நட்பு தொழிலக வாயுவாக இரயில்வே பணிமனைகளில் பயன் படுத்துதல்

ஔ) கூரைக்கு மேல் சூரிய சக்தி உற்பத்தி அமைப்பை இரயில்வே பணிமனைகளிலும் மற்றும் உற்பத்தித் தலங்களிலும் பொருத்துதல்

ஃ) டீ.இ.எம்.யு. இரயில் வண்டிகளில் 250 பின்னால் வரும் பெட்டிகளுக்கு விளக்கு மற்றும் விசிறிக்கு வேண்டிய சூரிய கட்டமைப்பு சார்ந்த மொத்தச் சுமை அமைப்பு

இந்த பத்திரிக்கைக் குறிப்பு மத்திய இரயில்வே துணையமைச்சர் திரு ராஜன் கொஹைன் லோக்சபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துமூலம் 19-07- 2017 (புதன் கிழமை) அன்று அளித்த பதிலை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.

 

 

****


(Release ID: 1498985) Visitor Counter : 75
Read this release in: English