மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வித் துறையில் டிஜிட்டல் முன்முயற்சி
Posted On:
31 JUL 2017 3:53PM by PIB Chennai
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் உயர் கல்விக்கான டிஜிட்டல் முன்முயற்சிகள் குறித்த தேசிய மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தது. கடந்த மாதம் 8 முதல் 10-ந் தேதி வரை புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இம்மாநாட்டில், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மாநில தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எம்.கள், ஐ.ஐ.எஸ்.ஈ.ஆர்.கள், ஐ.ஐ.எஸ்.சிகள், ஐ.ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள் மற்றும் பிற மத்திய நிறுவனங்களின் இயக்குநர்கள் கலந்துகொண்டனர். தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வழியாக, தேசிய கல்வித்திட்டத்தின் கீழ் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை குடியரசுத் தலைவர் முறையாக துவக்கிவைத்தார். அவையாவன:-
- சுயம் ( SWAYAM): தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவருக்கும், எந்நேரத்திலும், எந்த இடத்திலும் உயர் தரமான கல்வியை தரக்கூடிய, ஓர் உள்நாட்டு, பெருமளவு திறந்தவெளி ஆன்லைன் படிப்புகளுக்கான (Massive Open Online Courses) தளம்.
- சுயம் பிரபா ( SWAYAM Prabha): உயர் தரமான கல்விக்குரிய பாடங்களை/விஷயங்களை 32 (“நேரடியாக வீட்டுக்கு” சேவை) அலைவரிசைகள் மூலம் 24X7 நேர அடிப்படையில் அனைத்து வீடுகளுக்கும் கட்டணமின்றி ஒலிபரப்பும் சேவை.
- தேசிய கல்வித்துறை களஞ்சியம் (The National Academic Depository (NAD): இது ஒரு டிஜிட்டல் களஞ்சியம். பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் அனைத்துச் சான்றிதழ்களையும், பயனாளிகளின் தேவைக்கேற்ப சட்டபூர்வமானதாக்குகிறது.
- இந்தத் தகவலை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 1498965)
Visitor Counter : 84