மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஏழை மாணவர்களுக்கான திட்டங்கள்
Posted On:
31 JUL 2017 3:56PM by PIB Chennai
சமூகத்தில் பொருளாதார ரீதியிலான பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் தேவைகளை மத்திய அரசு உணர்வுடன் அணுகுகிறது. அவர்களுக்கு உயர் கல்வியை கிடைப்பதில் சமவாய்ப்பை உறுதி செய்வதில் கட்டுப்பாடுடன் இருக்கிறது.
மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்படி, திறமையான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூபாய் ஆறு இலட்சத்திற்கும் குறைவாக இருந்தால், நிதி உதவி அளிக்கப்படுகிறது. அவர்கள் உயர் கல்வி பயிலும் காலத்தில் தினசரி செலவுகளை எதிர் கொள்ள இது பயன்படும். 10, + 2 கல்வி முறையில் அல்லது இதற்கு இணையான கல்வி முறையில் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட போர்டு தேர்வில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் வெற்றி பெறும் மாணவர்களில் பர்செண்டைல் விகிதத்தில் 80க்கும் மேல் இருந்து வழக்கமான கோர்ஸை தொடரும் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறாதவர்கள் இந்த திட்டத்தில் உதவிபெற தகுதி உடையவர்கள்.
கல்விக்கடனுக்கான வட்டி விகித மானியம் வழங்கும் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடன் மீதான வட்டி மானியம் வழங்கப்படுகிறது; அவர்களது பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ4.5 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். கடன் வசூல் நிறுத்திவைக்கப்படும் காலத்தில் (அதாவது அங்கீகரிக்கப்பட்ட கோர்ஸின் காலம்+ஓர் ஆண்டு) இந்தத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் முழு வட்டி மானியம் அளிக்கிறது. பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டுறவு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட ஷெட்யூல்டு வங்கிகளில் கல்விக் கடன்கள் பெற்றிருந்தால் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பின் மாதிரி கல்விக்கடன் திட்டத்தின் மூலம் இந்த மானியம் அளிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்விக்கான தேசியத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. திறமைகளை அடையாளம் கண்டு அவற்றை பேணி வளர்த்தல், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவித்தல் மற்றும் பெருமளவிலான மக்களுக்கு கல்வி வசதியை நீட்டித்தல் ஆகியனவற்றிற்கு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் தகவலை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 1498964)
Visitor Counter : 77