மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு
Posted On:
27 JUL 2017 3:44PM by PIB Chennai
கல்விக்காக இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% (2014 ஐ.நா வளர்ச்சித் திட்ட மதிப்பீட்டின்படி) செலவழிக்கிறது, இதில் மூன்றில் ஒரு பங்கு உயர்கல்விக்கு செலவிடப்படுகிறதயர் கல்வி நிறுவனங்களின் நிதி தேவை எப்போதும் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை விட அதிகமாகும். னஉயர்கல்விக்கா நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது; அதேநேரத்தில், உயர் கல்வி நிறுவனங்கள், ஆலோசனைகள் வழங்குவது மற்றும் ஆராய்ச்சிகளுக்கு உதவுதல் போன்ற முயற்சிகள் மூலமாக, நிதி திரட்டும் தங்களது உள்வள ஆதாரங்களை மேம்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அவை நிதியளவில் வலுவான நிறுவனங்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இது தவிர்த்து உயர் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிக்க, ரூ.300 கோடியை தொடக்க மூலதனமாகக் கொண்டு உயர் கல்வி நிதி முகமை (முகமை) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த HEFA 2013ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் பிரிவு 8ன் கீழ் வரும் கம்பெனியாக பதியப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி அளித்திட, கடன் மற்றும் பத்திரங்கள் மூலமாக தேவையான நிதியை சந்தைகளில் இருந்து இது திரட்டும். இந்த நிறுவனங்களின் மொத்த உள் தேவைகளுக்கு ஏற்ப கடன்கள் வழங்கப்படும்.
இந்தத் தகவலை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் மகேந்திரநாத் பாண்டே இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 1498963)