சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஏழை சிறுபான்மை மக்களின் கல்வியை மேம்படுத்துதல்

Posted On: 18 JUL 2017 5:30AM by PIB Chennai

மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட ஆறு சிறுபான்மை இனங்களான (முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்ஸிக்கள், ஜைனர்கள்) சார்ந்த ஏழை மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக சிறுபான்மை விவகாரங்களின் அமைச்சகம், கீழ்க்கண்டத் திட்டங்களை நாடு முழுவதும் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

  1. மெட்ரிக்கிற்கு முந்தையப் பள்ளிக் கல்வி உதவித்தொகை
  2. மெட்ரிக் படிப்பிற்குப் பிறகான கல்வி உதவித்தொகை
  3. தகுதி-மற்றும்-பொருளாதார அடிப்படையிலான உதவித்தொகை
  4. மௌலானா ஆசாத் தேசிய ஃபெலொஷிப்
  5. இலவசப் பயிற்சி மற்றும் தொடர்புடையத் திட்டம்
  6. பதோ பர்தேஷ்- வெளிநாட்டுப் படிப்பிற்காக, சிறுபான்மை இனத்தவர்க்கு   கல்விக் கடனில் வட்டி மானியத் திட்டம்
  7. UPSC, SSC, SPSC பூர்வாங்கத் தேர்வுகளில் வெற்றிப் பெற்ற சிறுபான்மை இனத்தவர்க்கு   ஆதரவுத் திட்டம்
  8. பல்துறை மேம்பாட்டுத் திட்டம் (MsDP): அங்கண்வாடி மையங்கள், பள்ளிகள்    கல்லூரிகள், ஐடிஐ, பாலிடெக்னிக் போன்றவற்றின் உள்கட்டமைப்பு    மேம்பாட்டிற்காக மாநில அரசுகளுக்கு நிதி உதவி
  9. நை மன்ஸில் திட்டம் (Nai Manzil Scheme): சிறுபான்மை இனத்தவர்க்கான    ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான முன்முயற்சி: பள்ளிகளில்  இடைநின்ற மாணவர்களுக்கு முறையான கல்வி மற்றும் பயிற்சி    அளித்தலை நோக்கமாகக் கொண்டது.
  10. மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைத் திட்டங்கள் (MAEF)
      • சிறுபான்மை இனத்தைச் சார்ந்த சிறந்த மாணவிகளுக்கான, பேகம் ஹசரத் மஹால் தேசிய உதவித் தொகை.
      • கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு என் ஜி ஓக்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் உதவி மான்யத் திட்டம்.

 

எண் 1 முதல் 9 வரையிலான திட்டங்கள் குறித்த விவரங்கள் அமைச்சகத்தின்,  www.minorityaffairs.gov.in. என்ற வலைத்தளத்திலும்,  எண் 10ற்கான விவரங்கள் www.maef.nic.in. என்ற வலைத்தளத்திலும் காணக் கிடக்கின்றன.

 

இராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இந்த விவரங்கள் அடங்கிய பதில்,  சிறுபான்மை விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி அவர்களால் எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்டது.

*******



(Release ID: 1496644) Visitor Counter : 146


Read this release in: English