நிதி அமைச்சகம்

தங்க ஆபரணங்கள் மீது நேர்மாறான வரி வசூலைப்பற்றி மேலும் விளக்கம்; ஒரு தனி மனிதன் பழைய தங்க அணிகலன்களை ஒரு நகைக்கடைக்காரருக்கு விற்கிறபோது நகைக்கடைக்காரர் அப்படி வாங்கும் பொருள்களுக்கான வரியை நேர்மாறான வரி வசூல் அமைப்பின் படி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை; இருந்த போதிலும் பதிவு செய்யப்படாத வழங்குபவர் தங்க நகைளை பதிவு செய்யப்பட்டுள்ள நகை வியாபாரிக்கு விற்றால் எதிர்மாறான வசூல் அமைப்புப்படி வரிகட்ட வேண்டும்.

Posted On: 13 JUL 2017 6:57PM by PIB Chennai

நேற்று நடந்த ஜி.எஸ்.டி. மாஸ்டர் வகுப்பில், நேரடி உடன் பதில்தேவைப்படும் ஒரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின்படி ஒருநகை வியாபாரி ஒரு நுகர்பவரிடமிருந்து நகைகளை வாங்குவது மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவு 9(4) ன் விதிகளின்படி நேர்மாறான வசூல் அமைப்புப்படி 3% ஜிஎஸ்டி வசூலிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்படி, இந்தச் செய்தி குறித்து மேலும் விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்பது உணரப்பட்டது.

 

மேற்கண்ட சட்டப் பிரிவு 9(4) வரி விதிக்கக்கூடிய பொருள்களை (இங்கு தங்கம்) பதிவுபெறாத வழங்குபவரால் (இங்கு ஒரு தனிமனிதர்) பதிபெற்றுள்ள ஒரு நபருக்கு (இங்கு நகை வியாபாரி) வழங்கும் போது பதிவு செய்யப்பட்டுள்ள நபர் (இங்கு நகை வியாபாரி) நேர்மாறான வரிவசூல் அமைப்புப்படி வரிசெலுத்தவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த ஏற்பாடு, பிரிவு 2(105) மற்றும் மேற்கண்ட சட்டத்தின் பிரிவு 7 ஆகியவற்றை ஒன்றாக வைத்துப் படிக்கப்பட வேண்டியுள்ளது. பிரிவு 2 (105) வழங்குபவரை சரக்கு அல்லது சேவைகளை வழங்குபவராக வரையரை செய்கிறது. பிரிவு 7 ன்படி வழங்கல் என்பது ஒரு வாணிக நடவடிக்கை, ஒரு நபரால் ஒரு தொழில் நிகழ்வின் போது அல்லது அதன் முன்னேற்றம் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு.

ஒரு தனி மனிதரால் தங்கம் விற்கப்படுவது ஒருதேவை நிறைவைக்கருத்தில் கொண்டது என்றாலும், அவருடைய தொழில் நடத்துவதற்காக அல்லது அதன் வளர்ச்சிக்காக என்று அது சொல்லப்படக் கூடியதல்ல (பழைய தங்கம் விற்பது மேல் கண்டுள்ள தனி மனிதரின் தொழில் அல்ல) வாகையால் அது வழங்கல் என்று கருதப்படமாட்டாது. இதன்படி, ஒரு தனி நபரால் நகைவியாபாரிக்கு விற்கப்படும் பழைய தங்க நகை பிரிவு 9(4)ல் கண்டுள்ள ஏற்பாட்டுக்குள் இது வராது மற்றும் நகை வியாபாரி இது போன்ற வாங்கல்களுக்காக நேர்மாறான வசூல் அமைப்பின்படி வரிசெலுத்த வேண்டியதில்லை. இருந்தபோதிலும், பதிவுபெறாத தங்க ஆபரணங்களை வழங்குபவர் பதிவு பெற்றுள்ள வழங்குபவருக்கு அவற்றை விற்க நேர்ந்தால், ஆர்.சி.எம். படி வரி கட்ட வேண்டி வரும்.



(Release ID: 1496629) Visitor Counter : 49


Read this release in: English