குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஜிஎஸ்டி நடைமுறையாக்கல் உயர்ந்த வாய்ப்புகளை வழங்குகிறது: கல்ராஜ் மிஷ்ரா

Posted On: 13 JUL 2017 6:22PM by PIB Chennai

மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகமும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பும் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரிகள் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில்களில் கணினி மயம் என்ற தலைப்பில் சர்வதேச பணிமனையை நடத்தினர். திரு கல்ராஜ் மிஷ்ரா, மத்திய அமைச்சர் எம். எஸ். எம்., .நாடு.முழுவதும் உள்ள எம். எஸ். எம்.. களின் வளர்ச்சிக்கு எம். எஸ். எம்.. அமைச்சகம் தனி முன்னுரிமை எடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் பலவேறுபட்ட திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டார். தொழில். முனைவோரின் கடன் தொடர்பான சிக்கல்களை விரைவில் வங்கிகள் தீர்த்துவிட  நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வரப்படுகிறது என்றும் சொன்னார்.

ஜிஎஸ்டி நடை முறைப்படுத்தப் பட்டதால் வரிகள் அடுக்கிக் கொள்ளும் நிலை தவிர்க்கப்பட உள்ளது மற்றும் இது வரிச்சுமையை கணிசமாக குறைக்க வல்லது என்றும் தெரிவித்தார்.

மேலும், இது முறையான பொருளாதாரத்துக்கு வழிகோலி நாட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு எழுச்சி ஊட்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே எம். எஸ். எம்.. கள் இத்தருணத்தை ஒரு வாயப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இதை சவாலாக ஏற்கவேண்டியதில்லை.

அமைச்சகம் ஜி.எஸ்.டி. யை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். வளர்ச்சி ஆணையர் (எம் எஸ் எம்ஈ) அலுவலகத்தின் கீழ், ஜி.எஸ்.டி. செல்கள் தலைமையக அலுவலகங்களிலும் , எல்லா மாவட்ட நிறுவனங்களிலும் மற்றும் கருவி அறைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. என். எஸ்.. சி. யினால் வழிகாட்டும் அறைகள் கட்டணமில்லாக் கைபேசி எண்- 1800-111- 955 வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது வரை 12000 தொழில் முனைவோர் பல்வேறு எம்.எஸ்.எம்.. கள அலுவலர்களால் மற்றும் பயிற்சி நிறுவனங்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்குப் பகுதியில் உள்ள அகர்த்தாலா மற்றும் கௌகாத்தி ஆகிய வற்றிற்கு ஜி.எஸ்.டி. பற்றிய செய்திகளை தானே அளித்துள்ளதாக அமைச்சர் உறுதிபடுத்தினார். அமைச்சர் தனது எல்லா அலுவலரையும் சமூக ஊடகங்களான முகநூல், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்கள், அறிக்கைகள் ஆகியவற்றை வெளியிடுவதோடு கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் 200 க்கு மேற்பட்ட கூடுதல் செயலர் / இணைச் செயலர் நிலை அதிகாரிகள் மாவட்ட அளவில் ஜி.எஸ்.டி. அமுலாக்கப்படுவதை மேற்பார்வையிட அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறார்கள். இம் முயற்சியில் எம் எஸ்எம் ஈ அமைச்சகத்தின் இணச் செயலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இலகு உத்தியோக் சமச்சார் என்ற சிறப்பு இதழ் அவருடைய            அமைச்சகத்தால் ஜி.எஸ்.டி. யை முன்னிறுத்தி வெளியிடப் பட்டிருக்கிறது என்று திரு மிஷ்ரா தெரிவித்தார். மேலும், செயலர் (எம். எஸ். எம்..) மந்திரிசபை செயலர் நிலையில் மீள்பார்வைக் குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மத்திய எம். எஸ். எம்.. அமைச்சர் ஜி.எஸ்.டி. யுடன் எம். எஸ். எம்.. அமைச்சகம் அதனுடைய பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படுவதற்கு வழிகாட்டு முறைகளை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சொன்னார். மின்னணு முன்முயற்சிகள் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கிட மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இடர்ப்பாடு நீக்குதல் மற்றும் மேற்பார்வை அமைப்புகள் (சி. பி. ஜி..எம். எஸ் மற்றும் .ஜி.எம்.எஸ்.) ஆகியவை நிறுவப்பட்டிருக்கின்றன. மின்னணு அலுவலகம் மற்றும் மொபைல் நட்பு இணையதளம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன மற்றும் என்னுடைய எம் எஸ். எம்.. மொபைல் ஆப், எம். எஸ். எம்.. தகவல்  வங்கி முகப்பு மற்றும் டிஜிட்டல் எம்.எஸ். எம்.. முகப்பு ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் எம். எஸ். எம்.. திட்டம், எம். எஸ். எமீ. க்களை புதிய அணுமுறைக்கு எ.கா. கிலவுட் கம்ப்யூட்டிங் ஐ. சி. டியைப் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் தொழில் செயல் முறைகளில் முன்னேற்றம் கண்டு தேசிய மற்றும் அனைத்துலக போட்டிகளில் திறனுடன் இயங்கும் தன்மையைப் பெற்றிடச் செய்வற்காகத் துவங்கப்பட்டது.

மத்திய ணையமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஜி.எஸ்.டி. யின் நடைமுறையால் அரசாங்கம் நுண்ணிய மற்றும் சிறிய பகுதியைச் சார்ந்த இதுவரை ஒழுங்குபடாமல் இருந்த கிராமப்புற தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மத்தியத் ணையமைச்சர் திரு ஹரிபாய் பார்த்திபை இது வரை மிகப்பெரிய இணைப் பொருளாதாரமாக நிலை பெற்றுக் கொண்டிருந்தது ஜி.எஸ்.டி. யின் வருகையால் பின்னர் முறையான மடிப்புக்குள் வந்துவிடும் என்று தெரிவித்தார். மேலும் அவர் தொழில் முனைவோரை அவர்களது வாடிக்கைகாரர்களை தேர்வு செய்யும் போது முன்னெச்சரிக்கையுடன் தேர்வு செய்தால் புதிய வரி விதிப்பு அமைப்பால் கிடைக்க.கூடிய வரி உள்வரவு பயனை பெறமுடியும் என்று கூறி வேண்டுகோள் விடுத்தார்.

திரு அருண்குமார் பாண்டா, செயலர்(எம் எஸ் எம் ஈ).எல்லா பங்கேற்பாளர்களையும் வரவேற்றார் மற்றும் புதிய ஜி.எஸ்.டி. வருகையால் எம். எஸ். எம்.. கள் சந்திக்க உள்ள சிக்கல்கள் குறித்துப்பேசினார். அவர் தகவல் வெளிப்பாட்டு தொழில்நுட்பம் (ஐசிடி) எம் எஸ் எம் ஈ தொழில் முனைவோருக்கு விளைக்கும் பயனை வலியுறுத்திப் பேசினார். வருகை தந்திருந்த சி.பி..சி. பிரதிநிதி எம் எஸ் எம்.. தொழில் முனைவோரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்

 

********


(Release ID: 1496628) Visitor Counter : 169


Read this release in: English