மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஊழலை ஒழிப்பதற்கும், பொது மக்களுக்கு ஆற்றல் கூட்டவும் ஆதார் ஒரு திறன்மிக்க கருவி: திரு.ரவி ஷங்கர் பிரசாத்

Posted On: 11 JUL 2017 5:39PM by PIB Chennai

ஜூலை 11, 2017 அன்று 'தனிநோக்க ஊர்தி'யான பொதுச் சேவைகள் மையம் (சி.எஸ்.சி), இந்தியாவில் ஏழைகள் மற்றும் நலிந்த சமூகத்தினர்க்கு ஆதார் சேவைகளை வழங்குவதில் கிராமப்புற தொழில் முனைவோர்கள் செய்த தாக்கத்தையும், முன்னேற்றத்தையும் காட்சிப்படுத்துவதற்காக, "சி.எஸ்.சி மூலமாக ஆதார் சேவைகள்- ஒரு தனித்தன்மையான முயற்சி" எனும் பட்டறையை பொது சேவை. மையங்கள் மூலமாக நடத்தியது.

 

மத்திய மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு.ரவி ஷங்கர் பிரசாத், புது தில்லியில், இந்தியா வாழ்வுச் சூழல் மையத்தில் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார். கீழ்மட்ட அளவில் முக்கியமான சேவைகளை வழங்குவதில் ஆர்வமிக்க கிராமப்புற தொழில் முனைவோர்களின் முயற்சிகளை அவர் பெரிதும் பாராட்டினார்

 

"பொது சேவை மையத்தின் கிராமப்புற தொழில்முனைவோர்களிடம் நான் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்கிறேன். நமது கிராமப்புற தொழில் முனைவோர்கள் இந்தியாவில் மாற்றம் உருவாக்குபவர்கள். இந்தியாவில் பொதுச்சேவை மையங்கள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கின்றன. வரும்காலத்தில் பொதுச் சேவைகள் மையங்களில் ஒரு கோடி பேர் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது", என்றார் அமைச்சர்.

 

அரசாங்க பிரச்சாரங்களில் பொதுமக்களைத்திரட்டுவதில் கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆற்றலை நினைவூட்டி, "விஎல்இ-கள் பணமில்லா இந்தியா இயக்கத்தில் இரண்டு கோடி பேருக்குப் பயிற்சி தந்திருக்கின்றனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்". "சமீபத்தில், மத்திய ஜவுளிதுறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி கைத்தறியின் விரிவாக்கத்துக்கு கிராமப்புற தொழில் முனைவோர்களின் ஆதரவைக் கோரியிருக்கிறார். அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் அவர்களது சேவைகளுக்கு கிராமப்புறு தொழில் முனைவோர் ஒத்துழைப்பை வேண்டுகின்றன", என்றார் அமைச்சர்.

 

அவர் மேலும்,"ஊழலை ஒழிக்க ஆதார் ஒரு பயன்மிக்க கருவி. ஊழலை ஒழித்து ரூ.50,000 கோடி சேமித்திருக்கிறோம்" என்றார். அவசியப்படும்போது வி.எல்.இ-கள் எழுச்சியோடு வந்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்கிட அரசாங்கத்துக்கு உதவுவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மத்திய அமைச்சர் உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்திருந்த 600 கிராமப்புற தொழில் முனைவோர்களின் முன் உரையாற்றினார். புது தில்லியில், இந்தியா வாழ்வுச்சூழல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மின்னணுவியல், தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), உரத்துறை, உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளை இந்தப் பட்டறை ஒன்றிணைத்தது.

 

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை செயலர் திரு.அஜய் பிரகாஷ் ஸாஹ்னி, "அரசாங்கத்தின் ஆதரவோடு, குறிப்பாக மாண்புமிகு அமைச்சரின் ஆதரவோடு, பொதுச்சேவைகள் மையங்கள் (சி.எஸ்.இ) இயக்கம் புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கின்றன. ஆதார் பயணத்தில் பொது சேவை மையம் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்கிறேன்", என்றார். 'ஆதார் திறனூக்க பணம் செலுத்தும் முறை' ஆற்றல் கூட்டும் கருவியும் கூட என்ற அளவில் இந்தியாவில் பொது சேவை மையம் கிராமப்புற தொழில் முனைவோர் மிகத் திறமையோடு செய்கின்றனர்; நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பல்வேறு குடிமக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைத் தொகைகள் மற்றும் ஒய்வூதியத் தொகைகள் விநியோகத்தைச் செயலாக்குகின்றனர்.

 

யு..டி... தலைமை நிர்வாக அதிகாரி, டாக்டர். அஜய் பூஷன் பாண்டே, "நாட்டில், 116 கோடி மக்கள் ஆதாரில் சேர்ந்திருக்கின்றனர்; பொதுசேவை மையம் பெரிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறது. அரசு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிசெய்ய, கடந்த 5-6 மாதங்களில், பல்வேறு அரசாங்க சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கிறது. குடிமக்களின் ஆற்றல் கூட்டுவதே இதன் குறிக்கோள். ஆதாரின் மீதான உத்வேகத்தைத் தொடர்வதற்கும், வாழ்வை எளிதாக்க ஆதாரின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு பற்றி சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் கிராமப்புற களின் உதவி நமக்கு வேண்டும்" என்றார்.

 

பட்டறைக்கு பங்கேற்பாளர்களை வரவேற்ற சி.எஸ்.சி -'தனிநோக்க ஊர்தி' யின் தலைமை நிர்வாக அதிகாரி, திரு.தினேஷ் தியாகி, "சி.எஸ்.சியின் அடிப்படையே ஆதார்தான். இதுதான் நமது முதல் கொள்கை. ஆதார் என்பது பொதுமனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு புரட்சி. நாடெங்கும் நமது 28000 பிஇசி-கள் 22 கோடி ஆதார் பயனாளிகளைச் சேர்த்திருக்கின்றனர். வி.எல்.இ-கள் குடிமக்களின் வாசலுக்கே சென்று ஆதார் சேவைகளைச் செய்கின்றனர்", என்றார்.

 

ஆதார் சேவைகள் வழங்குவதில் வி.எல்.இ-கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைப் பட்டியலிட்ட டாக்டர் தியாகி, "நாடெங்கும் 80 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்; பள்ளிகளில், அங்கன்வாடி மையங்கள், போலியோ சொட்டுமருந்து சாவடிகள் ஆகியவற்றில் குழந்தைகளைச் சேர்ப்பதில் புதிய முறையைத் தொடங்கியிருக்கிறோம். ஆதார் தயாரிப்பதில் புதுமையான வழிகளைப் புகுத்தியிருக்கிறோம்; உதாரணமாக, ஆதார் மேளா, ஆதார் வாகனங்கள் போன்றவை. வி.எல்.இ-கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உறுதிசெய்யும் வகையில் ஆதாரை உருவாக்கி இருக்கின்றனர்" என்றார்.

 

அந்த நிகழ்வில், அமைச்சர் அவர்களால், ஆதார் மூலமாக சி.எஸ்.சி.-கள் மேற்கொண்ட சில தனித்தன்மையான முயற்சிகளை முன்னிலைப்படுத்தி ஒரு சிறப்புப் பதிப்பும் வெளியிடப்பட்டது. ஆதார் சேவைக்காக ஆன்லைன் முன்னனுமதி முறையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்; இதனால் பொதுமக்கள் ேர்காணலுக்கான முன்னனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்திற்குச் செல்ல முடியும்.

 

மின்னணுவியல், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர், டாக்டர். அஜய் குமார், இணைச்செயலர், திரு.சஞ்சீவ் மிட்டல், யுஐடிஏஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.அஜய் பூஷன் பாண்டே, துணைத் தலைமை இயக்குனர், திரு.நரேந்திர பூஷன், உதவி தலைமை இயக்குனர், திரு.அஷோக் குமார் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

 

***

 

 



(Release ID: 1496445) Visitor Counter : 116


Read this release in: English