வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அரசு இ-சந்தைத்தளம் (ஜி.இ.எம்.), பகிரங்கக் கொள்முதல்களில் வெளிப்படைத் தன்மையையும், கொள்முதல் கட்டணக் குறைப்பையும் உறுதிசெய்கிறது: வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜி.இ.எம். மீதான தேசிய ஆலோசனைப் பட்டறையை அமைத்திருக்கிறது மத்திய அரசு

Posted On: 11 JUL 2017 3:51PM by PIB Chennai

அரசு இ-சந்தைத்தளம் எனும் தனிநோக்க ஊர்தியும், வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் விநியோகம் மற்றும் நிறை வேற்றல்கள் பொது இயக்ககமும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய இ-ஆட்சி முறை பிரிவுடன் இணைந்து,   அரசு இ-சந்தைத்தளத்தில் வாங்குவோர் / விற்போருக்காக நடத்தும் இரண்டு நாள் தேசிய ஆலோசனைப் பட்டறை இன்று தொடங்கியது.

 

பட்டறையைத் தொடங்கிவைத்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் கூறுகையில், "பொதுவெளிக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை அடையும் நோக்கில் இது ஒரு நன்னாள். நாம் கிட்டத்தட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடும் இன்று, மாநிலத்தில் அரசுக் கொள்முதலுக்கான ஒரு தளமாக அரசு இ-சந்தைத்தளத்தை முன்வந்து ஏற்கும் அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இடைவிடாத, உற்சாகமான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவினால்தான் இது சாத்தியமாகிறது என்பதையும் கூறி அவருக்கும், பொதுவெளிக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை கொண்டுவருவதில்உள்ள அவரது மனஉறுதிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்", என்றார்.

 

"அரசு இ-சந்தைத்தளம் (ஜிஇஎம்) தேசிய இ-கொள்முதல் இணையத்தளமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதில் நான் மகிழ்வடைகிறேன். ஜிஇஎம் நடைமுறைக்கு முன்பான நிலையை ஒப்பிடுகையில், ஜிஇஎம் தளத்தில் நடைமுறைகள் செய்வதால், விலையில் சுமார் 20-30  சதவிகிதக் குறைப்பு அடையப்பட்டிருக்கிறது. ஆகவே, இணையத்தில் பின்பற்றப்படும் நடை முறைகள் உண்மையிலேயே விலையைக் குறைப்பு இருப்பதற்கான குறிப்பிடத்தக்க, தெளிவான சான்று இருக்கிறது. மிக முக்கியமாக, பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கிய 10 நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட்டுவிடும் என்பதால், விற்பவர்கள் தமது பணத்தை வசூலிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி அலைய வேண்டியதில்லை", என்றார் அமைச்சர்.

 

ஆந்திர அரசின் சார்பில் பேசிய ஆந்திர சமூக நலத்துறை அமைச்சர் திரு.நக்கா ஆனந்தபாபு கூறுகையில், பொதுவெளிக் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையாக் கொண்டு வருவதற்கு, அரசு இ-சந்தைத்தளம் மத்திய அரசின் ஒரு மாபெரும் முயற்சியாகும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையிலும், செயல் திறமையிலும் நம்பிக்கை கொண்ட ஆந்திர அரசு சார்பில் பங்கேற்பதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதன் மூலம், புதிய, வெளிப்படைத் தன்மையுள்ள பொதுவெளிக் கொள்முதலைத் தொடங்குகிறோம்", என்றார்.

 

புதுச்சேரி தலைமைச் செயலர் திரு.மனோஜ் குமார் பரிதா, புதுச்சேரி அரசின் சார்பில் கூறுகையில், "லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதால், வர்த்தக அமைச்சகம் மற்றும் அவர்களின் குழுவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். வணிகர்கள் மற்றும் விற்போர்களிடம் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதிகாரிகளின் நடவடிக்கைகளில் ஒரு பெரும் மாற்றத்தையும் உண்டாக்கும். எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையுள்ள ஜிஇஎம், ஒரு அற்புதமான கருத்துருவாக்கம் . நாம் தேடும் சரக்குகளைப்பற்றி நாம் தெளிவாக இருக்கிறோம்; அவர்கள், தாம் விற்கும் விலையில் தெளிவாக இருக்கிறார்கள். இது வரவேற்புக்குரிய ஒரு அற்புதமான தொடக்கம்", என்றார்.

 

விநியோகம் மற்றும் நிறைவேற்றல்கள் பொது இயக்ககத்தின் தலைவர், திரு.பினய் குமார் கூறுகையில், "ஜிஇஎம் பதினொரு மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டபோது, கொண்டிருந்த ஒரு பொருள் மேசைக் கணினி, வாடகைக்கார் எனும் ஒரு சேவை வாடகைக்கார் மட்டுமே. இன்று 5000க்கும் மேலான அரசுத்துறை உபயோகிப்பாளர்கள், 16000 விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர்கள், 50000க்கும் மேற்பட்ட பொருட்கள் என்ற அளவில் நாம் வளர்ந்திருக்கிறோம். ஜிஇஎம் இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறதென்றால், அது அந்த அளவு வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பின்னணியில் உள்ள பதிலுரைக்கும் பொறுப்பு போன்றவற்றால் ஆகும். இந்த இணையதளம் வெளிப்படைத் தன்மையை வழங்குவதோடு, அவர்களுக்குக் கணிசமான சேமிப்பையும் வழங்குவதால்,பெரும்பான்மையான மாநிலங்கள் இப்போது இந்தத் தளத்தின் பயன்களைப்பற்றி முழுமையான நம்பிக்கை கொண்டுவிட்டன. இந்த மாநிலங்கள் இந்த இணையத்தை சிறந்த முறையில் பயன் படுத்திக்கொள்வதோடு, அவர்களின் நடவடிக்கைகள் பலன்தரும் நோக்கிலும் முயற்சிகளிலும் செயல்படுத்திக்கொள்ளும்", என்றார்.

 

இந்த முயற்சிகளைப்பற்றி ஜிஇஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியும், தேசிய இ-அரசுமுறை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி. எஸ்.ராதா சவுகான் கூறுகையில், "அரசு இ-சந்தைத்தளம் எண்ணியல் இந்தியா நோக்கமான 'நேரடிதொடர்பற்ற, பனமற்ற, காகிதமற்ற மேலாண்மைக்கட்டுப்பாடு ' என்பதை அடைவதற்கான ஒரு தேசிய கொள்முதல் இணையமாகும். அரசாங்க கொள்முதல் செய்வோருக்கான ஒரு கொள்முதல் இணையமாக மட்டுமே பார்க்காமல், சிறுகுறு நிறுவனங்களுக்கும் சேர்த்து, நாடெங்கும் எல்லா நிலையிலும் உள்ள அனைவருக்குமான திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனையும் திறனுக்கான கருவி யாகும்", என்றார்.

 

நிதி, கருவூலம், தகவல் தொடர்பு மற்றும் இ-அரசுமுறை மாநில அரசுத்துறைகள் பொதுநிர்வாகம், தொழில் மற்றும் வர்த்தகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, உணவு, நிதி வாரியம் மற்றும் கொள்முதல் நடவைக்கைகளைக் கவனிக்கும் பிற துறைகளில் கொள்முதல் செயல்பாடுகளைக் கையாளும் 300க்கும் மேற்பட்ட முதுநிலைஅதிகாரிகள் , இவர்களுடன் ஜிஇஎம்மில் உள்ள 250க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இந்தப் பட்டறையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எண்ணியல் இந்தியா அரசின் மனித குறுக்கீடுகளைக் குறைப்பதன்மூலம் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது நோக்கம் என்பதால், ஜிஇஎம் கொள்முதல் பணிகளில் பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை எடுத்துக்காட்டவும், கொள்முதல்களில் விதிகள் மற்றும் நடைமுறைகளில் தேவையான மாற்றங்களைப் பரிந்துரைத்து அவர்கள் இதனுடன் இணைவதை உணர்வுபூர்வமாக்கவும், ஜிஇஎம்மின் எளிதான அமலாக்கத்துக்கு மாநில/அரசாங்க வாங்குவோர்/விற்போரின் சந்தேகங்களுக்குத் தெளிவூட்டவும் ஜிஇஎம்-ஐ மாநிலங்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதே இந்தப் பட்டறையின் குறிக்கோள்.

 

 

 



(Release ID: 1496441) Visitor Counter : 65


Read this release in: English