மத்திய அமைச்சரவை
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 JUL 2017 8:50PM by PIB Chennai
ஏற்கனவே பிரகடனம் செய்யப்பட ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜம்மு - காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்ட) அவசர சட்டம் 2017-க்கும் இந்த சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017-க்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அவசர சட்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) சட்டம் 2017 ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டம் 09.07.2017 அன்று பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) மசோதா 2017 தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும்.
****
(Release ID: 1496421)
Visitor Counter : 89