மத்திய அமைச்சரவை

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகம் சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் சங்கத்தில் இடம்பெறவும் பலதரப்பு புரிந்துணர்வு உடன்பாடுகளில் பங்கேற்கவும் அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 19 JUL 2017 8:47PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகத்திற்கு (IRDAI) சர்வதேச காப்பீட்டு நிறுவன மேற்பார்வையாளர்கள் சங்கத்தில் (IAIS) கையெழுத்துதாரராகப் பங்கேற்கவும், பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MMoU) இடம்பெறவும் அனுமதிப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டது.

சர்வதேச காப்பீட்டு நிறுவன மேலாளர்கள் சங்கம் (IAIS) என்ற அமைப்பு காப்பீட்டுத் துறை மேற்பார்வையாளர்கள் உலகளாவிய நிலையில் தங்களிடையே ஒத்துழைப்பைக் கையாளவும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் இயங்கும் நிறுவனமாகும். பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MMoU)  என்பது அந்த சங்கத்தின் கையெழுத்துதாரர்களின் ஓர் அறிக்கையாகும். அந்த உடன்பாடு தகவல் பரிமாற்றம், அவ்வாறு தகவல்களைப் பெறுவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்தது ஆகும்.

நிதிச் சந்தை ஒருங்கிணப்பது அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அளவில் காப்பீட்டு நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் பரஸ்பரம் ஒத்துழைப்புக்கும், காப்பீட்டு நிறுவன மேற்பார்வையாளர்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தேவைகள் இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகம் (IRDAI) சர்வதேச காப்பீட்டு நிறுவன மேற்பார்வையாளர்கள் சங்கத்திலும் (IAIS) பலதரப்பு புரிந்துணர்வு உடன்பாட்டிலும் கையெழுத்திடும் உறுப்பினராகியுள்ளது. இது தொடர்பான இரு தரப்பு உடன்பாட்டின்போது  இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகம் (IRDAI) பங்கேற்காத நிலையில், எல்லை கடந்த அம்சங்கள் எழும் நிலையில் கையெழுத்திடும் இரு நிறுவனங்களுக்கு இடையிலான அடிப்படை ஒத்துழைப்புக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் வாய்ப்பை பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கிறது. இதன் மூலம் சர்வதேச காப்பீட்டு நிறுவன மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போதைய உடன்பாடுகளை விட விரிவானது. நிதிப் பயங்கரவாதத்தை ஒடுக்கவும், ஒழுங்குபடுத்தப்பட்ட ஹவாலா தடுப்பின் கீழ் காப்பீட்டு இடைத்தரகர்களை மேற்பார்வையிடவும் இது வழி செய்யும்.

****


(Release ID: 1496369) Visitor Counter : 100


Read this release in: English