மத்திய அமைச்சரவை
இந்திய சமூக நல நிதியத்தின் வழிகாட்டு நெறிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 JUL 2017 8:51PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு இந்திய சமூக நல நிதியத்தின் (ICWF) வழிகாட்டு நெறிகளில் சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போதும் துயரச் சூழல் ஏற்படும்போதும் உரிய வகையில் உதவுதற்காக இந்திய சமூக நல நிதியம் (ICWF) 2009ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் மூலம் உதவி கிடைப்பதற்கான் வாய்ப்பை விரிவு செய்யும் வகையில் பரந்துபட்ட முறையில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிகள் அமையும். இந்த வழிகாட்டு நெறிகள் முக்கியமான மூன்று அம்சங்கள் கொண்டவை. துயரச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவது, சமூகநலச் செயல்பாடுகள், தூதரக அளவிலான சேவைகளை மேம்படுத்துவது ஆகியவை ஆகும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கோரிக்கைகள், வேண்டுகோள்களை உடனடியாகக் கவனிக்க வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்கள், இதர அலுவலகங்கள் செயல்பட வழி செய்யும்.
இவ்வாறு துயரச் சூழலில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவுவது மட்டுமின்றி உள்நாட்டு மோதல்களில் சிக்கியுள்ள லிபியா, ஈராக், யேமன், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்கவும்சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உரிய ஆவணமின்றி பணியில்அமர்த்தப்பட்டு 2013ம் ஆண்டு சோதனையில் (Nitaqat) பிடிபட்டு, 2017ம் ஆண்டு பொதுமன்னிப்புக்கு ஆளாகி இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இந்தியர்களைக் காப்பாற்றுவதற்கு உதவவும் இந்நிதியம் செயல்படுகிறது. இந்நிதியத்தின் மூலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, உதவி செய்யும் பணிகள் உலக அளவில் பாராட்டப்படுகின்றன. இது வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்வோர் இக்கட்டான நிலையில் இந்தியாவின் உதவியைப் பெறலாம் என்ற நம்பிக்கையை அடைவதாக உள்ளது.
இந்திய சமூக நல நிதியத்தின் (ICWF) சேவை அனைத்து வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்கள், இதர அலுவலகங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்திய தூதரகங்களிலும் இதர அலுவலகங்களும் அளிக்கும் சேவைக்கான கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் இந்த நிதியத்துக்கு நிதி பெறப்படுகிறது.
****
(Release ID: 1496323)
Visitor Counter : 74