மத்திய அமைச்சரவை

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) சட்ட முன்வடிவுக்கு (2017)

Posted On: 19 JUL 2017 8:49PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) மசோதாவுக்கு (2017) மாற்றுவதற்கும் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜம்மு காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது) அவசரச் சட்டத்தை (2017) முன்தேதியிட்டு அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்தில் மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (2017)  அம்சங்கள்  CGST சட்டம் என ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த அவசரச் சட்டம் 2017ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள்  வரி (திருத்தம்) சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்

****



(Release ID: 1496319) Visitor Counter : 65


Read this release in: English