சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஆயுஷ் வசதிகளைக் குறித்த வழிகாட்டுதல் சுருக்கம்
Posted On:
21 JUN 2017 6:20PM by PIB Chennai
சுற்றுலாத்துறை அமைச்சகம் ஆயுஷ் வசதிகளைபற்றிய வழிகாட்டுதல் சுருக்கத்தை இன்று வெளியிட்டிருக்கிறது. தேசிய மருத்துவம் மற்றும் நல்வாழ்வு சுற்றுலாக்கழகம் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா அவர்களின் தலைமையில் இயங்குவது மருத்துவம் மற்றும் நலவாழ்வு சுற்றுலாத்துறை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர அடிப்படையில் பல்வேறு உதவிகளை அளிப்போரினால் வழங்கப்படும் பல்வேறு வசதிகளின் அமைப்பை கோடிட்டுக்காட்ட வேண்டிய தன் தேவையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் எப்போதும் எடுக்கிற முயற்சிப்படி நிறுவனங்கள் மற்றும் செய்முறைகள் ஆகியவற்றின் உயர்தர பணி அளிக்கும் தன்மையை மேலோங்கச்செய்வது அதன் நோக்கமாகும். தொழில் தேவை அடிப்படையிலும் மற்றும் சுற்றுலா அமைச்சகம் சேர்ந்த பயனீட்டாளர்கள்: மருத்துவ நிறுவனங்கள் மற்றும் நல வாழ்வு அளிப்பவர்கள் (என் ஏ பி ஹெச் ) ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து நாட்டில் உள்ள ஆயுஷ் வசதிகள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நலவாழ்வு மையங்கள் பஞ்சகர்மா மருத்துவ விடுதிகள் ஆகியவற்றிற்கான தர நிர்ணய வழிமுறைகளை தேசிய தர நிர்ணயம் வழங்கும் அமைப்பினால் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகவே சுற்றுலாத்துறை அமைச்சகம் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மாவின் வழிகாட்டலின் படி ஆயுஷ் வசதிகளைச் சார்ந்த தர நிர்ணய தகுதிகளின் சுருக்கத்தை அளித்து தொழில் சார்ந்தோர் ஒப்புமையை வலியுறுத்தியுள்ளது. அச்சுருக்கத்தில் கீழ்க்கண்ட வசதிகளையுடைய நிறுவனங்களுக்கான தர நிர்ணயமும் சேர்க்கப்பட்டிருக்கிறது:
அ ஆயுர்வேத மருத்துவ மனைகள்
ஆ யோகா மற்றும் இயற்கை மருத்துவ மனைகள்
இ யுனானி மருத்துவ மனைகள்
ஈ சித்தா மருத்துவமனைகள்
உ ஹோமியோபதி மருத்துவமனைகள்
ஊ பஞ்சகர்மா மருத்துவக்கூடங்கள்
எ நலவாழ்வு மையங்கள்
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகுதிகள் அடிப்படையிலான தர நிர்ணயம் தொழிலுக்கு ஒரே நிலையிலான பணித்தன்மையை வழங்குவதற்கு உதவியாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் சந்தை வளர்ச்சி உதவி (ச வ உ) நல வாழ்வு சுற்றுலா வுக்கு உதவி அளிப்பவைகளான தேசிய தர நிர்ணய சான்று பெற்ற மருத்துவ மனைகள் (தே நி சா ம) மற்றும் மருத்துவ சுற்றுலாவை வளர்ப்பவர்கள் (பயண ஏற்பாடு செய்பவர்கள் / பயணம் அமைப்பவர்கள்) மருத்துவ சுற்றுலாவில் இந்திய அரசாங்க சுற்றுலா அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஈடுபட்டிருப்பவர்கள் பங்கேற்பதற்காக அமைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் நல வாழ்வு இந்தியாவுக்கு வெளியேயும் வளம்பெற வைக்கும் நிகழ்ச்சிகள் முதலியவை அளிக்கப்படுகின்றன. சான்று பெற்ற பணி அளிப்பவர்கள் சுற்றுலா அமைச்சகத்தின் இணைய தளத்திலும் உலக அளவில் அடைந்து சேரும் நம்பமுடியாத இந்தியா தொடர்செயற்பாடு ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். இந்தியா வரும் உத்தேசம் உள்ளவர்களுக்குத் தேவை யான தரச்சான்று பெற்று தரத்தன்மையை உறுதியுடன் பின்பற்றுகிற நிறுவனங்களை பற்றிய செய்தி பேருதவியாய் இருக்கும். தரச்சான்று வழங்குதல் பற்றிய விவரங்கள் சுற்றுலா அமைச்சகத்தின் இணைய தளம் www.incredible india.org த்தில் காணலாம்.
உலகம் முழுவதிலும் , முழுமையான மற்றும் மாற்று நலம் பேணும் அமைப்புகள் வியாதிகள் வாழ்வுமுறையைப் பொருத்தது என்பதால் பிரசித்தி பெற்று வருகின்றன. இந்தியா மிகவும் மதிக்கத்தக்க மருத்துவ ஞானம் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் என்பதோடு மனித உடல், மனம், மற்றும் உயிர் நலம் காக்கும் யோக பயிற்சி, இந்தியாவுக்கு வெளியே தோன்றியுள்ள யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகியவை இங்கே பெரிதும் விரும்பப்பட்டு வருகின்றன.
இந்தியா, தங்களின் உடல் மனம் மற்றும் உயிர் ஆகியவற்றை இளமையாக்கிகொள்ள விரும்பும் பார்வையாளர்களைக் கவரும் பாரம்பரியத்தைப் பெற்றிருக்கிறது. அதோடு இந்தியா மருத்துவ மாற்று அமைப்புக்களான யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை விரும்புவோரையும் கவர்கிறது. இன்று பயணத்தை எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள செய்யும் முன்னேற்றங்களின் காரணமாக அதிகமான மிகவும் அதிகமான மக்கள் நல்ல தன்மை, கட்டுக்குள் அடங்கிய, காலத்தில் கிடைக்கிற நலக்கவனிப்பு மற்றும் நலவாழ்வுக்கான தேர்வுசெய்யக் கூடிய வசதிகள் இருப்பதின் காரணமாக இந்தியாவுக்கு பிரயாணம் செய்து கொண்டு உள்ளார்கள். நலவாழ்வு சுற்றுலாத்தொழில் உலகளவில் 678 பில்லியன் யூ எஸ் டாலர்களை 2017 ம் ஆண்டு வாக்கில் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அது சுற்றுலா சார்ந்த பயன்களுல் மிக முக்கியமானதாகும்.
(Release ID: 1496136)
Visitor Counter : 120