விவசாயத்துறை அமைச்சகம்

"கூட்டுறவு- தேசிய பால்பண்ணைக் கட்டமைப்புத் திட்டம் மூலமாக பால்வளம் உருவாக்கல்" திட்டத்துக்காக "ஜெஐசிஏ (JICA) அலுவல் மேம்பாட்டு உதவி" ஏற்பாட்டின் கீழ் கடனுதவி வழங்கும் முன்வரைவு

Posted On: 10 JUL 2017 5:36PM by PIB Chennai

உலகின் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் 1998 முதல் இந்தியாவே முதன்மை வகிக்கிறது; உலகிலேயே கால்நடை பராமரிக்கும் மக்கள் தொகையைப் பெருமளவில் கொண்டது. 1950-51 இலிருந்து 2014-15 காலகட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி, 17 மில்லியன் டன்னிலிருந்து 146.31 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 2015-16 இல் பால் உற்பத்தி 155.49 மில்லியன் டன்களாக இருந்தது. நாட்டின் பால் உற்பத்தியில் சுமார் 54 சதவிகித பால் உற்பத்தி உள்நாட்டுச் சந்தையில் சந்தைப்படுத்தும் வகையில் உபரியாக உள்ளது. இதில் 20.5 சதவிகிதம் மட்டுமே ஒழுங்கு படுத்தப்பட்ட பிரிவினரால், கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் பால்வள நிறுவனங்களால், சரிசமமாக அளவில் வாங்கப்பட்டு பதப் படுத்தப்படுகிறது.

 

2021-22-க்குள் சுமார் 200-210 மில்லியன் மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ள வளர்ந்துவரும் தேவையைப் பூர்த்தி செய்ய, பாலைக் கொள்முதல் செய்யவும், உயர்மதிப்புப் பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், இந்தியாவும் அதன் உள்கட்டமைப்பை கிராம அளவில் மேம்படுத்த வேண்டும். ஒழுங்குமுறையிலான பால் பதப்படுத்தும் துறையில் கிராமத்துப் பால் உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் அணுக்கம் உருவாக்குவதன் மூலம் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை, பண்ணை அளவில் இரட்டிப்பாக்க அரசாங்கமும் அதிகாரம் வழங்கியுள்ளது.

 

கால்நடை வளர்ச்சி, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை பால்வள மேம்பாட்டுக்காக, பால் இருப்பைக் கையாள்வதற்கான தேவையைப் பூர்த்தி செய்ய, மொத்த பால் குளிரூட்டல், பதப்படுத்தலுக்கான உள்கட்டமைப்பு, மதிப்புக் கூட்டுப் பொருட்கள், ஒழுங்குமுறையான பால் சேகரிப்பு மையங்கள்/பால்வள கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கம், பால் போக்குவரத்து வசதிகள் மற்றும் சந்தை உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பால் குளிரூட்டும் வசதிகளை உள்ளடக்கிய ஒரு தேசிய நடவடிக்கைத் திட்ட முன்வரைவு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

 

இந்திய அரசு ஜப்பான் கூட்டுறவு நிறுவனத்திடம் இதற்கான கடன் பெறுவதற்காக 'கூட்டுறவாளர்- தேசிய பால்பண்ணை உள்கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் பால்வளம்' எனும் நோக்கில் விவசாயிகளின் வருவாயை அடுத்த 5 ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் இந்திய அரசின் உத்தரவாதத்துடன் ஒத்திசையும் ஒரு முன்மொழிவு ஆவணம் ஒன்றைச் சமர்பித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் மொத்த திட்ட அளவு ரூ.20057 கோடி. முக்கியமாக கிராம அளவில் 1.05 லட்சம் மொத்த பால் குளிரூட்டிகள் அமைத்து, நாளொன்றுக்கு 524,20 லட்சம் கிலோ கொள்ளளவு பால் குளிரூட்டல் செய்வதோடு, நாளொன்றுக்கு 76.5 லட்சம் கிலோ கொள்ளளவு பால் மற்றும் பால்பொருட்கள் பதப்படுத்தல் உள்கட்டமைப்பு உருவாக்கி, கூடுதலாக 1.28 லட்சம் கிராமங்களை, 121.83 லட்சம் கூடுதல் பால் உற்பத்தியாளர்களை உள்ளிணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். அத்துடன், தற்போதைய 160 லட்சம் விவசாயிகளுக்குப் பலன் தரும் வகையில், 'ஆபரேஷன் ஃப்ளட்' செயல்பாட்டின் கீழ், 20-30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பழைய, பால் ஆலைகளை, பால் பொருட்கள் ஆலைகளை மாற்றுதல்/ விரிவாக்குதல்,   மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க புதிய பால் மற்றும் பால்பொருட்கள் ஆலைகளை உருவாக்குதல் போன்றவற்றையும் இத்திட்டம் நிறைவேற்றும். இதற்கான கடன்தொகை, பால்வளத்துறையை மேம்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலமாகக் கையாளப்படும். இந்த முன்மொழிவு வரைவினை பொருளாதார விவகாரத்துறை, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்துக்கு (ஜெஐசிஏ) அனுப்பியுள்ளது.

 

இதன் தொடர்பாக, ஜெஐசிஏ குழு பிப்ரவரி 27 முதல் மார்ச் 3, 2017 வரை இந்தியாவுக்கு வந்திருந்தது. ஜெஐசிஏ குழுவின் ஆய்வுகள் மீது விவாதம் நடத்துவதற்காக, திரு.டதுமி குனிடகே தலைமையிலான குழுவுடன் மே 26, 2017 அன்று ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அக்குழுவின் ஆய்வின்படி, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஏழ்மையைப் போக்கும் நோக்கத்துடன் திட்ட முன்மொழிவில் மாறுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜெஐசிஏ இத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்யவிருப்பதால், இத்திட்டத்திற்கான நடைமுறைகளின் அட்டவணை,  ஜெஐசிஏ குழுவினருடன் விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தும் கால அளவு விளக்கப்படமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

***



(Release ID: 1496134) Visitor Counter : 66


Read this release in: English