விவசாயத்துறை அமைச்சகம்

தேசிய கால்நடை இயக்கம் (என்எல்எம்) கால்நடைத்துறைக்கு தரமான தீனியும் தீவனமும் கிடைப்பதை மேம்படுத்த, தீங்குகளைக் குறைக்க மற்றும் விரிவுபடுத்த, திறன் மேம்பாடு செய்திட மற்றும் பயிற்சி அளித்திட நிதி உதவி தருகிறது: திரு.ராதா மோகன் சிங்

Posted On: 13 JUL 2017 5:33PM by PIB Chennai

திட்ட முறையிலிருந்து இயக்கம் முறைக்கு என்எல்எம்-ஐ மாற்றி அமைப்பதற்கான காரணங்களில் ஒன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்குத் தேவையான

நெகிழ்வுத்தன்மை வழங்குவதே: திரு.சிங்

 

 

இந்தத் துறைக்கு போதுமான நிதி ஆதாரங்களைப் பெருக்கி, தக்க ஒன்றிணைவின் மூலம் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அவசியம் இருக்கிறது: திரு.சிங்

 

 

தேசிய கால்நடை இயக்கம் (என்எல்எம்) இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களிடம் திரு.ராதா மோகன் சிங் உரையாற்றினார்

 

 

மத்திய வேளாண்மைத்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறைஅமைச்சர், திரு.ராதா மோகன் சிங் இன்று தேசிய கால்நடை இயக்கத்தின் (என்எல்எம்) இரண்டாவது பொதுக்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, கால்நடைத்துறையின்-முக்கியமாக கோழிப்பண்ணை, ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள், சுமைதாங்கிக் கால்நடைகள் போன்றவற்றின் நீடித்த வளர்ச்சிக்காக தேசிய கால்நடை இயக்கத்தைச் செயலாக்குகிறது

என்றார் திரு.சிங்.

 

திரு.சிங் கூறுகையில், கால்நடைகள் மற்றும் எருமைகளை உள்ளடக்கிய கால்நடைத்துறைக்கு தரமான தீனியும் தீவனமும் கிடைப்பதை மேம்படுத்த, தீங்குகளைக் குறைக்க மற்றும் விரிவுபடுத்த, திறன் மேம்பாடு செய்திட மற்றும் பயிற்சி அளித்திட

என்எல்எம் நிதி உதவி தருகிறதுஎன்றார். இந்தச் செயல்பாடுகள்

பெரிதும் புழக்கடைசார்ந்ததாகவே இருக்கிறது என்பதால், கால்நடைவளர்ப்போர்களும், விவசாயிகளும், குறிப்பாக பெண்கள், ஒருங்கிணைவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஆயினும், சிறு அசைபோடும் பிராணிகள், புழக்கடை கோழிப்பண்ணை, பன்றிகள் மற்றும் பிற சிறுபான்மைக் கால்நடைகள்வளர்ப்பு, பிரத்யேக அறிவியல் இடையீடுகளுடன் கால்நடை  வளர்ப்போருக்கான ஊட்டச்சத்து மற்றும் அன்றாட வாழ்வாதாரப் பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்த பெருமளவிலான வாய்ப்புகளைத் தருகிறது என்றார்.

 

திட்ட முறையிலிருந்து இயக்கம் முறைக்கு என்எல்எம்-ஐ மாற்றி அமைப்பதற்கான காரணங்களில் ஒன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, அவற்றின் சூழலுக்கு ஏற்ப தக்க இடையீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை வழங்குவதே ஆகும். கால்நடைத்துறையின் ஒட்டுமொத்த தேவைகளைக் கணக்கில் கொண்டு, தொடர்ந்து நடைபெறும் வேறு திட்டங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்வதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு கூடுதலாக துணை செய்வதற்கு, என்எல்எம் என்கிற குடையின் கீழ் இத்துறைக்கு

போதுமான நிதிஆதாரங்களைப் பெருக்கி, தக்க ஒன்றிணைவின்

மூலம்செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அவசியம் உருவாகி இருக்கிறது.

 

என்எல்எம்மின் கீழ் முன்மொழியப்பட்ட செயல்பாடுகளின் பலன்களை சிறு மற்றும் குறு விவசாயிகளும் அனுபவிக்கும் வகையில், விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களின் தேவைகளை அனுசரித்து, புவியியல்சார் மற்றும் பிரதேசங்களின் தேவைகளின்படி, என்எல்எம்மின் கீழ் உள்ள எல்லா கூறுகளும் நெகிழ்வுபடுத்தப்பட்டு தொகுதிகளாக்கப்பட்டிருக்கின்றன.

 

தேசிய கால்நடை இயக்கம் கீழ்கண்ட நான்கு துணைஇயக்கங்களாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

 

  1. கால்நடை வளர்ப்புக்கான துணை இயக்கம்

 

  1. வடகிழக்குப் பிரதேசத்தில் பன்றி வளர்ப்புக்கான துணை இயக்கம்

 

  1. தீனிகள் மற்றும் தீவனம் பெருக்குவதற்கான துணை இயக்கம்

 

  1. திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்களுக்கான துணை இயக்கம்

 

கூட்டத்தில், என்எல்எம் துணை இயக்கங்களின் பல்வேறு கூறுகளின் மீது ஒரு விரிவான அறிமுகம் வழங்கப்பட்டது.

 

பல்வேறு திட்டங்களின் எளிதான நடைமுறைக்கும்,இடையீடுகளின் திறன்மிக்க செயலாக்கங்களுக்கும் வழிகாட்டு முறைகளின் நெருங்கிய ஒருங்கிணைப்பு கட்டாயமாகும்.

 

என்எல்எம்மின் கடந்த மூன்றாண்டு முன்னேற்றங்களும் சாதனைகளும் கீழ்கண்டவாறு:

 

-- தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு (இடிஇஜி) திட்டத்தின் கீழ் உதவப்பட்ட பயனாளிகள் -32981

 

--கிராமப்புற புழக்கடை கோழிப்பண்ணை மேம்பாட்டின் கீழ் நிதி உதவப்பட்ட பயனாளிகள் - 3.68 லட்சம்  

 

--கால்நடைக் காப்பீடு மேற்கொள்ளப்பட்டவை - 35.64 லட்சம்

 

--நலத்திட்ட உதவி தரப்பட்டவை-3.00 லட்சம் ஆடுகள்,9.80 லட்சம் பன்றிகள்

--ஆதரிக்கப்பட்ட மாநில கோழிப்பண்ணை/கால்நடைகள்/ஆடுகள்/ பன்றி வளர்ப்புப் பண்ணைகள்-41

 

-- விநியோகிக்கப்பட்ட வைக்கோல் அறுக்கும் கருவி-54930

 

--விநியோகிக்கப்பட்ட விதைகள் -96321 குவிண்டால்கள்

 

--நிறுவப்பட்ட பசுந்தீவனம் பதபடுத்தும் அலகுகள் -3823

 

-- உதவப்பட்ட கால்நடை மேளாக்கள் -519

 

-- அமைக்கப்பட்ட கால்நடை விவசாயிகள்குழுக்கள்-223; விவசாயிகள் களப்பணி பள்ளிகள் -121 தெளிவூட்டுக் கண்காணிப்பின்கீழ் கொணரப்பட்டவிவசாயிகள்- 8420

 

வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறைஅமைச்சரின்

தலைமையின்கீழ் அடைந்த சாதனைகள் :

 

என்எல்எம்மின் கால்நடை வளர்ப்புக்கான துணை இயக்கத்தின் கூறாக, முன்பு தெரிவுசெய்யப்பட்டிருந்த 300 மாவட்டங்களுக்கு மாறாக நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் இடர் மேலாண்மை மற்றும் காப்பீடு செயல்படுத்தப்பட்டுள்ளது

 

  • அனைத்து பிராணிகளும் உள்நாட்டு கலப்பின கறவை மாடுகள்,சுமைதாங்கிக் கால்நடைகள் (குதிரை, கழுதை, கோவேறு கழுதை,ஒட்டகங்கள், எருமைகள், எருதுகள்) மற்றும் மற்ற கால்நடைகள்(முன்பு இருந்த கறவை மாடுகளுக்கு மாறாக ஆடு,

செம்மறியாடு, பன்றி

...



(Release ID: 1496133) Visitor Counter : 117


Read this release in: English