தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

புதிய தொலைத்தொடர்புக் கொள்கை, இணைப்பினால் இயக்கப்படுவதல்ல; பயன்பாட்டால் இயக்கப்படுவது: மனோஜ் சின்ஹா

Posted On: 12 JUL 2017 12:27PM by PIB Chennai

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு.மனோஜ் சின்ஹா, அவரது அமைச்சகம் இணைப்பினால் இயக்கப்படும் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை, 2012வைவிட, பயன்பாட்டால் இயக்கப்படும் புதிய தொடர்புக் கொள்கையைக் கொணரும் பணியில் இருக்கிறது என்றார். இங்கே தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் தொழில் நுட்பம் எனும் தலைப்பில் கருத்தரங்கில் புதிய அரசுமுறை கட்டமைப்பை கொணர்ந்து பேசியபோது, இந்தப் புதிய கொள்கை இறுதி உபயோகிப்பாளர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாகவும் தொலைத் தொடர்புச் சேவைகள் கிடைப்பதை மேலும் விரிவாக்குவதற்குப் புதுப்புது வாய்ப்புகளைத் கண்டெடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்றார். அதிவேக தகவல் சேவைகளின் மற்றும் இயல்பு நேர தேவைக்கேற்ற அலைவரிசை உபயோகிப்பாளர்களின் அதிகரிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளின் வருகை புதிய கொள்கைகள் உருவாக்குவதற்காக நிர்பந்தப்படுத்துகிறது. முதல் முறையாக, பொதுமக்களிடமிருந்தும், பங்குதாரர்களிடம் ருந்தும் புதிய கொள்கைக்காக பெருமளவில் கருத்துக்களைப் பெறுவதற்காக துறைக்கு வெளியில் இருந்து அதிகமான நிபுணர்களின் குழுவை ஈடுபடுத்த முடிவெடுத்திருப்பதை கோடிட்டுக் காட்டினார்.

 

அறிவில் செறிந்து கொண்டே வரும் இந்த உலகில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக தொலைத்தொடர்புத்துறை ஒரு அத்தியாவசியமான உள்கட்டமைப்பெனும் நிலையை ஏற்கிறது என்றார் அமைச்சர். ஏப்ரில் 2017 நாளன்று, 1.17 பில்லியன் வயர்லெஸ் தொலைபேசி இணைப்புகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 1.2 பில்லியன் தொலைபேசி இணைப்புகள் நாட்டில் உள்ளது. அதுபோலவே, தற்போதுள்ள 276.52 மில்லியன் இணைப்புகள் என்ற நிலை, அகன்ற வரிசை இணைய இணைப்புகளின் அதிவேக வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்றார். இந்த எண்ணிக்கைக்கும் மேலாக, இந்தியாவில் தகவல் போக்குவரத்து 2016-17-ஆம் ஆண்டின் முதல் மும்மாதத்தில் 561 மில்லியன் ஜிபி என்ற அளவில் இருந்து மூன்றாவது மும்மாதத்தில் 2988 மில்லியன் ஜிபிக்கு, அபாரமான 400 சதவிகித வளர்ச்சியாக 6 மடங்கு கூடியதைப் பார்க்கும்போது மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.

 

நமது சேவை வழங்குவோர்கள் 4ஜி தொழில்நுட்பத்தை விரைந்து பயனுக்குட்படுத்துகையில், தனது கவனம் இரண்டு முக்கியமாக அம்சங்களின் மீதானது - ஒன்று, வடகிழக்குப் பிராந்தியங்களையும், இடது சாரி தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து எல்லா பகுதிகளுக்கும் இணைப்பை பெருக்குவதன் அவசியம்; இரண்டாவது, ஐந்தாவது தலைமுறைத் தொழில்நுட்பம்-5ஜி மீது கண் வைத்து, உயர்நிலைகளை உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்களிப்பைச் செய்வதை உறுதிசெய்து. புதுமைகள் புகுத்துவதிலும் 5ஜி தொழிநுட்பக் குழுமியக் காப்புரிமைகளிலும் ஆரோக்கியமானதொரு பங்கைப் பெறுவதுமாகும் என்றார் திரு.சின்ஹா. அவர் மேலும், தொலைத்தொடர்புத்துறையில் ஏப்ரல், 2016 முதல் மார்ச், 2017 வரையில் அந்நிய நேரடி முதலீட்டுப் பங்குகளின் உள்வரத்து, 5564 மில்லியன் டாலராக இருந்தது; அது 2013-14 இலிருந்து ஒவ்வொரு வருடமும் சராசரியாக வந்த சுமார் 1.3 பில்லியன் உள்வரத்தின் நான்கு மடங்காகும் என்றார் அவர்.

மின்னியல் இந்தியா திட்டம் மற்றும் மின்னியல் பொருளாதாரத்துக்கு ஒரு முன்தேவையாக அடிப்படையான சிறந்த இணைய இணைப்பு அவசியமாகும், என்றார் அமைச்சர். மேலும் கூறுகையில் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சிக்குச் சாலை உள்கட்டமைப்பு அத்தியாவசியமாக இருக்க, 21 ஆம் நூற்றாண்டில் தகவல் பயணத்துக்கேற்ற மாபெரும் நெடுஞ்சாலைகள் கட்டாயத் தேவையாகும் என்றார். இந்திய தந்தி வழி உரிமை, 2016 அறிவிப்பு கேபிள் இடும் அனுமதி நடைமுறைகளை மேலும் எளிதாக்கி தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர்களுக்கு எளிதான வர்த்தகத்துக்கு உதவுகிறது என்றார். சென்ற வாரம் தொலைத்தொடர்புத்துறை, கைப்பேசி திருட்டு நிகழ்வுகளைப் பெருமளவில் தடுக்கக்கூடிய சர்வதேச கைப்பேசி உபகரணங்கள் அடையாளம் (ஐஎம்இஐ) அடிப்படையிலான பதிவுகள் மற்றும் சான்றளிப்பு முறையை அமைக்க வழி செய்யும் 'மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவேட்டினை' வெளியிட்டது. தொலைத்தொடர்பு நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதற்கான டிராய் பரிந்துரைகளைத் தீவிரமாக ஆலோசித்து, ஒவ்வொரு குறையையும் பதிவுசெய்து, மேற்பார்வை செய்து, தொடக்கம் முதல் இறுதிவரை கண்காணிக்கும் நவீன தொழில்நுட்பத்தாலான தீர்வு ஒன்றை முன்மொழிய அதிகாரிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது.

அரசின் தற்போதைய மனிதவளக் கொள்கையை மறுபரிசீலனை செய்திட வலியுறுத்திய அமைச்சர், மாநில, மத்திய அரசுகள் அத்தகைய திறன் வளங்கள் குறைவுள்ளவையாக இருப்பதால் எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அங்கு அரசுத்துறைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தனித்திறன்களை கொணரவேண்டும் என்பது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

நிகழ்வில் தொலைத்தொடர்புச் செயலர், அருணா சுந்தரராஜன் பேசுகையில், 7.6 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதத்துக்கும் மேல் வளரும் அடுத்த வளர்ச்சி இயந்திரமாக உலகம் இந்தியாவை உற்றுநோக்குகிறது; அதற்கு அரசு மற்றும் தனியார் துறையின் மிகப்பெரும் உழைப்பு அவசியமாகிறது என்றார். தொலைத்தொடர்புத்துறை ஒரு மாற்றம் உருவாக்கும் இயந்திரமாக வேண்டும் என்றும், ஒரு கட்டுப்படுத்தும் துறையாக இல்லாமல், ஒரு உள்கட்டமைப்பு கட்டுமானச் செயல்படுத்துறையாக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாடிக்கையாளர் மகிழ்ச்சியே வர்த்தக வெற்றியின் உச்சகட்டமாகும் என்று குறிப்பிட்ட அவர், புதுமை இந்தியா உருவாக்கத்தில் பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றிட அடுத்த 5 ஆண்டுகளில் நாடெங்கும் இணையதள ஊடுருவல் 700 முதல் 800 மில்லியன் எனும் இலக்கை அடையவேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். புதிய தொழில்நுட்பப் பிரிவுகளில் நிலையான வளர்ச்சியின் அவசியத்தைக் கோடிட்டுக்காட்டி, மின்னணு பணம் செலுத்தல்களில் இந்தியா அடுத்த நிலைக்குத் தாவியதைக் குறிப்பிட்டார்.

<><><><><>



(Release ID: 1496132) Visitor Counter : 88


Read this release in: English