பாதுகாப்பு அமைச்சகம்
வங்கக் கடல்/வடக்கு இந்துமகா சமுத்திரத்தில் 'பயிற்சி மலபார்' தொடங்கியது
प्रविष्टि तिथि:
10 JUL 2017 1:40PM by PIB Chennai
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இடையில் கடற்படை ஒத்துழைப்பு,இந்த மூன்று ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான வலுவான, நீடித்த உறவுகளை பிரதிபலிக்கிறது. இந்திய அமெரிக்க கடற்படைகளுக்கு இடையில் 1992இல் தொடங்கப்பட்ட இந்த மலபார் பயிற்சித் தொடர்கள், ஜப்பானிய கடல்வழி தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎப்) பங்கேற்பினால். நோக்கம்,பல்வகைத்தன்மை மற்றும் பங்கேற்பு ஆகியவற்றில் திடமாக வளர்ந்து ஒரு பன்முகப் பயிற்சியாக உயர்ந்திருக்கிறது.
மலபார் -17 எனும் 21வது முறைப் பயிற்சி வங்கக்கடலில் ஜூலை 10 முதல் 17, 2017 வரை நிகழ்த்தப்படும். இந்த மூன்று கடற்படைகளுக்குள் இணைந்தியங்குத்தன்மையைப் பெரிதாக்குவதும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பொதுவான புரிதல்கள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதுமே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். மலபார் -17 இன் விரிவு, சென்னையில் ஜூலை 10 முதல் 13 வரையிலான துறைமுகசார் நிகழ்வின்போது அதிக அளவிலான தொழில்ரீதிச் சர்ச்சைகள், ஜூலை 14 முதல் 17 வரையிலானகடல்சார் நிகழ்வின்போது கடலில் பல்வேறு வகையிலான செயலியாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்வாண்டில் கடல் பயிற்சிகளின் முனைப்பு, விமான இயக்கச் செயற்பாடுகள், விண்வெளிப் பாதுகாப்புகள், நீர்மூழ்கிகளுக்கு எதிரான போர்கள், தரைவழிப் போர்கள், தீவிரவாதங்களை ஒடுக்கும் கடல்சார் தேடல்கள் மற்றும் கையகப்படுத்தும் செயல்பாடுகள், தேடுதல் மற்றும் மீட்புகள், இணைந்த கடற்படை மற்றும் தந்திர நடைமுறைகள் ஆகியவற்றின் மீது இருக்கும். கூடுதலாக, ஜூலை 15, 2017 அன்று மூன்று நாடுகளின் அதிகாரிகள் கடலில் கப்பலுக்கு அனுப்பப்படுவர்.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்விமானம் தாங்கிக் கப்பல், அதன் விமானத்துறைப் பிரிவினர், ரன்வீர் எனும் ஏவுகணைத் தடமறிந்து தாக்கியழிக்கும் போர்க்கப்பல், ஷிவாலிக், சயாத்திரி எனும் உள்நாட்டு ரகசிய பீரங்கிக்கப்பல்கள், கமோர்ட்டா எனும் நீர்மூழ்கி கப்பல்களைத் தாக்கும் ஏஎஸ்டபிள்யு போர்க்கப்பல், கொவா மற்றும் கிர்பான் எனும் ஏவுகணை போர்க்கப்பல்கள், ஒரு சிந்துகோஷ் வகையிலான நீர்மூழ்கி கப்பல், ஐஎன்எஸ் ஜ்யோதி எனும் கப்பற்படை எண்ணெய்க்கப்பல், பிஎஸ்ஐ எனும் நெடுந்தூர கடல்வழி ரோந்து விமானம் ஆகியவற்றோடு இந்திய கடற்படை முன்னிலை வகிக்கும். நிமிட்ஸ் கேரியர் ஸ்ட்ரைக் குழுவில் மற்றும் மற்ற யுஎஸ் ஏழாவது கடற்படையின் பிரிவில் உள்ள கப்பல்களோடு அமெரிக்க கடற்படை முன்னிலை வகிக்கும். நிமிட்ஸ் வகை போர்விமானங்கள் தாங்கும் நிமிட்ஸ் போர்க்கப்பல் அதன் விமானப் பிரிவினருடன், பிரின்ஸ்டன் எனும் டிகோன்டிரோகா வகை விரைவுப் போர்க்கப்பல், ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்களுடனான ஆரலீக் பூர்க் வகை தாக்கியழிக்கும் போர்க்கப்பல்கள் கிட், ஹோவர்ட் மற்றும் ஷூப், லாஸ் ஏஞ்செல்ஸ் வகை எதிர்த்துத்தாக்கும் நீர்மூழ்கிக்கப்பல், பி8ஏ எனும் நெடுந்தூர கடல்வழி ரோந்து விமானம் போன்றவற்றை உள்ளடக்கியது அமெரிக்க கடற்படை.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன் மார்கோஸ் பயிற்சித்தளமான ஐஎன்எஸ் கர்ணாவில், இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கிடையேயும் வெடிமருந்து ஒழுங்குமுறை பராமரிப்புக் குழுவுடனும் ஒரு தனியான சர்ச்சையும் இந்தப் பயிற்சியில் நிகழும். ஜப்பானிய நாட்டின் ஜேஎம்எஸ்டிஎப் கடற்படை, எஸ்எச் 60K ஹெலிகாப்டர்கள் கொண்ட ஹெலிகாப்டர் தாங்கியான ஜேஎஸ் இஸுமோ, எஸ்எச் 60K ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடனான ஏவுகணைகளைத் தாக்கியழிக்கும் போர்க்கப்பல், ஜேஎஸ் சஸாநமி ஆகியவற்றுடன் முன்னிலை வகிக்கும்.
இந்திய, ஜப்பானிய, அமெரிக்க கடற்படையிடையே பரஸ்பர நம்பிக்கை, இணைந்தியங்குத்தன்மையை வலுப்படுத்தி, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ளும் நோக்கில் 16 கப்பல்கள், இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள், 95க்கும் அதிகமான போர்விமானங்களின் பங்கேற்புடன் நிகழும் மலபார்-17 ஒரு மாபெரும் சாதனை மைல்கல்லாகும். இந்தப் பயிற்சி செயலியக்கப் பரப்பில் ஏற்படும் பொதுவான கடல்சார் சவால்களை அலசுவதற்கு மூன்று நாடுகளின் இணைந்த அர்ப்பணிப்பின் எடுத்துக்காட்டாகும். இது சர்வதேச கடற்சார் சமூகத்தினரின் நலன்களுக்காக இந்தோ-பசுபிக் கடல்சார் பாதுகாப்பினை அதிகப்படுத்துவதில் காலம்கடந்து இணைந்து செல்வதற்கான வழிமுறையை உருவாக்கும்.
*******
(रिलीज़ आईडी: 1496130)
आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English