நிதி அமைச்சகம்

ஆன்மிக நிறுவனங்களால் நடத்தப்படும் உணவு கூடங்களில் வழங்கப்படும் இலவச உணவுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு; ஆலயங்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருதுவாராக்கள், தர்காக்கள் போன்ற ஆன்மிக தளங்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மீது மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி எதுவுமில்லை

Posted On: 11 JUL 2017 3:55PM by PIB Chennai

ஆன்மிக நிறுவனங்களால் நடத்தப்படும் உணவு கூடங்களில் வழங்கப்படும் இலவச உணவுகள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதாக ஊடகச் செய்திகள் வருகின்றன. இது முற்றிலும் சரியல்ல. அதுபோன்று வழங்கப்படும் இலவச உணவுகள் மீது ஜிஎஸ்டி கிடையாது. மேலும், ஆலயங்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருதுவாராக்கள், தர்காக்கள் போன்ற ஆன்மிக தளங்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மீது மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி எதுவுமில்லை.

 

ஆனால், பிரசாதம் தயாரிப்பதற்கான சில உள்ளீடுப் பொருட்கள் மற்றும் உள்ளீட்டுச் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படும்.

 

 

சர்க்கரை, காய்கறிகள், உணவு எண்ணெய்கள், நெய், வெண்ணெய், சரக்குகள் கொணர்வதற்கான போக்குவரத்து போன்றவை இதில் அடங்கும். இவற்றில் பெரும்பாலான உள்ளீட்டுப் பொருட்கள் மற்றும் உள்ளீட்டுச் சேவைகள் பலவகை உபயோகங்களாக இருக்கின்றன. ஜிஎஸ்டி நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட பயனுக்காக வழங்கப்படும் சர்க்கரை போன்றவை மீது தனியாக ஒரு வரிவிகிதத்தை விதிப்பது கடினம்.

 

மேலும், ஜிஎஸ்டி பல்வேறு நிலை வரி என்பதால், இறுதி உபயோகத்தின் அடிப்படையில் விலக்குகள், வரி குறைப்புகள் ஆகியவற்றை நிர்வகிப்பது கடினம். ஆகையால், ஜிஎஸ்டி இறுதி உபயோக அடிப்படையிலான விலக்குகளைக் கருதவில்லை. ஆகவே, ஆன்மிக நிறுவனங்களால் பிரசாதங்கள் அல்லது விநியோகம் செய்வதற்காக இலவச உணவு தயாரிப்பதற்கான உள்ளீட்டுப் பொருட்களுக்கும், உள்ளீட்டுச் சேவைகளுக்கும் உபயோக அடிப்படையிலான விலக்கு வழங்குவது விரும்பத்தக்கதல்ல.

 

 

*****


(Release ID: 1496118) Visitor Counter : 67


Read this release in: English