தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கடவுச்சீட்டு சட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவு கூறும் முகமாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

Posted On: 22 JUN 2017 3:39PM by PIB Chennai

கடவுச்சீட்டுச் சேவைத்திட்டம் (க சே தி) இந்தியாவில் கடவுச்சீட்டு வழங்கல் வெற்றிகரமாக பொதுதுறை தனியார்துறை ஒத்துழைப்பு (பொ த ஒ) உறுதி செய்த முறையில் நடந்து வருவதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் திரு மனோஜ் சின்கா குறிப்பிட்டார். குடிமக்கள் சேவை வழங்கும் முழுச்செயல்முறையும் திட்டமிட்டு தரப்படுத்தப்பட்டு எந்திரமய மாக்கப்பட்டு இரகசியமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுச்சீட்டு சட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவூட்டும் அஞ்சல் தலையை வெளியிட்டு, சேவைகள் நாடு தழுவிய ஒருங்கிணைந்து செயலாற்றும் பின்னல் போன்ற சூழலில் எல்லா கடவுச்சீட்டு வழங்கும் அதிகாரிகளையும் சுமார் 91 கடவுச்சீட்டுச் சேவை கேந்திரங்களையும் ஒருங்கிணைப்பதோடு வெளியில் உள்ள இச்சேவையோடு தொடர்புடைய குடியேற்றம், காவல், இந்திய அஞ்சல், இந்திய பாதுகாப்பு, பத்திரிக்கை, தூதரகங்கள்/ அயல்நாட்டிலுள்ள தூதர்அலுவலங்கள் ஆகிய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.

 

24 ஜூன் 1967 இந்தியாவில் கடவுச்சீட்டு வழங்கும் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும் ஏனெனில் இந்நாளில் தான் இந்திய குடியரசுத்தலைவர் கடவுச்சீட்டுச் சட்டம் 1967 க்கு ஒப்புதல் அளித்தார் என்றும் திரு சின்கா குறிப்பிட்டார். கடவுச்சீட்டு சட்டம் கடவுச்சீட்டு மற்றும் பிரயாண ஆவணங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் இந்தியாவிலிருந்து வெளியே போவதை ஒழுங்குபடுத்தவும் ஒரு வலிமையான சட்டத்துக்கு உட்பட்ட அமைப்பை வழங்கியது.

 

பெரிய அளவில் கடவுச்சீட்டு சேவையை நமது குடிமக்களுக்கு விரிவுபடுத்தி வழங்கும் பொருட்டு மற்றும் விரிவான பகுதிக்கு சேவையை அளிப்பதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சகமும் மற்றும் அஞ்சல் துறையும் (அ து) இணைந்து நாட்டில் உள்ள தலைமை அஞ்சல் அலுவகங்களை அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவை கேந்திரமாக (அ அ க சேவை கே) நாட்டுக் குடிமக்களுக்கு கடவுச்சீட்டு சார்ந்த சேவைகளை அளிக்க இருப்பதாக அமைச்சர் குற்றிப்பிட்டார். வெளிஉறவுத்துறை அமைச்சகமும் அஞ்சல் துறையும் இணைந்து நடத்தவிருக்கும் சோதனைத்திட்டங்கள் ஜனவரி 25, 2017ல் கர்னாடகாவிலுள்ள மைசூருவிலும் குஜராத்திலுள்ள தாகோட் என்ற இடத்திலும் தொடங்கப்பட்டன. விண்ணப்பதாரர்கள் இணையத்தின் இயக்கக் கட்டுப்பாட்டில் உள்ள கடவுச்சீட்டு தளத்தின் மூலமாக சந்திப்பு திட்டத்தை வகுத்துக்கொண்டு பின்னர் குறிப்பிட்ட அ அலு சே கே வந்து முன்னர் க சே கே கடவுச்சீட்டு வழங்கப்படுவற்கு முன்னே கடவுச்சீட்டு வழங்கப்பட செய்யும் முறைகளை செய்துவிடலாம் என்றும் திரு சின்கா கூறினார்.

 

235 அ அலு க சே கே இரண்டு க ட்டமாக அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது -- -- 86 முதல் கட்டத்திலும் மற்றும் 149 இரண்டாம் கட்டத்திலும் அமைய உள்ளன. முதல் கட்டத்தைச்சார்ந்த 52 அ அலு க சே கேந்திரங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.



(Release ID: 1495963) Visitor Counter : 91


Read this release in: English