ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம் முதல் காலாண்டில் குறிப்பிடும்படியான வெற்றியைத் தந்திருக்கிறது
Posted On:
05 JUL 2017 3:32PM by PIB Chennai
பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம் (PMGSY) நாடுமுழுவதும், குறிப்பாக வரலாற்று ரீதியாக கிராமப்புறச் சாலை வசதிகள் அதிகம் இல்லாத மாநிலங்களில் (அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிஷா, பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், இராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட்) இதுவரை இல்லாத அளவிற்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. PMGSY சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஏழு ஆண்டுகளின் உச்சத்தை, 2016-17 ஒரு நாளைக்கு 130 கி.மீ என்ற நிலையை எட்டியுள்ளது. இது 2011 - 2014 காலக்கட்டத்தின் சராசரியான 73 கி.மீ விட மிகவும் அதிகம். இந்த நிதி ஆண்டில் 2017-18 இலக்கு 57000 கி.மீ PMGSY சாலைகள்; இது சராசரியாக ஒரு நாளைக்கு 156 கி.மீ ஆகும். இதன் மூலம் 16600 தகுதியுள்ள கிராமங்கள் இணைக்கப்படும்.
இந்த வருவாய் ஆண்டின் -2017-18 முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2017) மொத்தம் 10.556 கி.மீ PMGSY சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சராசரியாக 117.28 கி.மீ என்ற அளவை இது தொட்டுள்ளது. 2016-17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2016) ஒரு நாளைக்கு சராசரியாக 97.29 அளவில் அமைக்கப்பட்ட 8756 கி.மீ நீள சாலைகளுடன் இதனைச் சாதகமாக ஒப்பிடமுடியும். இதுவரை ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை, சாலைகளின் நீளத்தை வைத்துப் பார்க்கும்போது, நிதி ஆண்டின் இலக்கில் 18.51% எட்டப்பட்டுள்ளது. தற்போதைய கட்டுமான வேகத்தின் அளவு அக்டோபர்-17 முதல் மார்ச்-2018 வரை மேலும் விரைவாக்கப்படும். ஆகவே ஆண்டு இலக்குகள், இலக்கைத் தாண்டி அதிகமாக எட்டப்படும் உறுதியான வாய்ப்பு இருக்கிறது என்று நம்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
16,600 தகுதியுள்ள கிராமங்களுக்கு இணைப்பு என்ற ஆண்டு இலக்கிற்கு எதிராக, வருவாய் ஆண்டின் 2017-18 முதல் காலாண்டில், 2,543 கிராமங்களுக்கு இணைப்புச்சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆண்டு இலக்கில் இது 15.31% ஆகும்
நாடுமுழுவதும் 1,78,184 தகுதியுள்ள கிராமங்களை இணைப்பதை PMGSY இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 1,61,576 கிராம இணைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. (இது 90.67% தகுதியுள்ள கிராமங்களின் அளவு). ஜூன் 2017 வரை மொத்தம் 5,12,031 கி.மீ நீளச் சாலைகள் அமைக்கப்பட்டு 1,29,004 கிராமங்கள், இணைக்கப்பட்டுள்ளன. (இது 72.39% தகுதியுள்ள கிராமங்களின் அளவு மற்றும் 79.84% திட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட எண்ணிக்கை).
மரபுசாரா கட்டுமானப் பொருட்களை (பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்ட் குளிர்கலவை, நிலக்கரிச் சாம்பல், சணல், தேங்காய் நார்ப் பொருட்கள், இரும்பு மற்றும் செம்புக் கசடு, கான்கிரிட் செல், சிமெண்ட் கான்க்ரிட் பேனல்) பயன்படுத்துவதிலும் PMGSY கவனம் செலுத்துகிறது. PMGSY சாலை அமைப்பில் ’பசுமைத் தொழில்நுட்பமும்’ பயன்படுத்தப்படுகிறது. இத்தகையப் பொருட்களைக் கொண்டு 2017-18 ஆண்டில் சாலை அமைப்பதற்கான இலக்கு 10,082 கி.மீ. இதில் ஜூன் 2018 வரையிலான முதல் காலாண்டில் 1235.22 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் குறிப்பிடுப்படி நன்றாகச் செயல்படும் மாநிலங்களாக, இராஜஸ்தான் (381 கி.மீ), பஞ்சாப் (181 கி.மீ), ஒடிஷா (131.38 கி.மீ), மத்தியப்பிரதேசம் (116.07 கி.மீ) மற்றும் தமிழ்நாடு (102 கி,மீ) இருக்கின்றன.
******
(Release ID: 1495951)
Visitor Counter : 76