குடியரசுத் தலைவர் செயலகம்
ஸ்ரீ பி. என். பகவதி அவர்களின் மறைவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUN 2017 4:34PM by PIB Chennai
மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி ஸ்ரீ பி.என்.பகவதி அவர்களின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு. பிரனாப் முகர்ஜி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மறைந்த தலைமை நீதிபதி அவர்களின் மனைவி ஸ்ரீமதி பிரபாவதி பகவதி அவர்களுக்குகுடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள செய்தி:
“தங்களின் கணவர், முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி அவர்களின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.”
“நீதிபதி பகவதி அவர்கள், புகழ்பெற்ற, சிறந்த சட்ட வல்லுநர்.நமது தேசத்தின் நீதித் துறை மற்றும் சட்டத்துறை அமைப்பிற்குமேலான பங்களிப்பை தந்துள்ளார். முனைப்பு மிக்க நீதித்துறைக்கான முன்னோடி என்று அறியப்பட்டவர் அவர். வழிகாட்டியாய்அமைந்த பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை அளித்தவர்; பொதுநல வழக்கு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தேசத்தின் சட்டம்சார்ந்தபொதுப்பரப்பின் தோற்றத்தை மாற்றியமைத்தவர்; இவற்றிற்காக என்றும் இவர் நினைவு கூறப்படுவார். இந்திய நீதித்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நீதிபதி பகவதி அவர்களுக்கு ’பத்ம விபூஷன்’ விருது அளிக்கப்பட்டது. சட்டத்துறை சார்ந்தோருக்கும் சட்ட வல்லுநர்களுக்கும்உத்வேகம் அளிப்பவராக என்றும் அவர் இருப்பார்.”
”உங்களுக்கும் உங்களது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த ஈடுசெய்ய முடியா இழப்பை தாங்கிக் கொள்வதற்கு உரிய வலிமையையும் துணிவையும் உங்களுக்கு அருளுமாறு நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1495802)
வருகையாளர் எண்ணிக்கை : 62