பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

கடந்த ஆண்டுகளில் சிசேரியன் அறுவை சிகிச்சை அசாதாரணமாக அதிகரிப்பு; மத்திய அரசு நடவடிக்கை

Posted On: 14 JUL 2017 6:21PM by PIB Chennai

தேவையற்ற சூழ்நிலைகளில் சி-செக்ஷன் என்று அழைக்கப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிப்பதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. மேனகா சஞ்சய் காந்தி, பிப்ரவரி 2017-ல் மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை அசாதாரணமாக அதிகரித்துள்ளது என்று கவலை தெரிவித்து இருந்தார். உலக சுகாதார அமைப்பின் (டபுள்யூ.எச்.ஒ) பரிந்துரையின்படி மொத்த பிள்ளைப்பேறில் 10 முதல் 15% வரையே சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் நடைபெற வேண்டும் என்பதை சுட்டிகாட்டிய திருமதி காந்தி சில மாநிலங்களில் இது மிக அதிக சதவீதமாக உள்ளது என்று கூறி இருந்தார். தமிழ் நாட்டில் இது 34% மற்றும் தெலுங்கானவில் இது 54% உள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை சதவீதம் இதைவிட அதிகமாகி உள்ளது வருத்தம் அளிப்பதாக கூறி இருந்தார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரின் கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் திரு. ஜெ.பி. நட்டா, அவரின் கருத்து உண்மையானது மற்றும் இந்த சிகிச்சை சதவீதத்தை கட்டுபடுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது என்றார். முதல் படியாக மத்திய அரசு சுகாதார திட்டம் கீழ் தெரிவு செய்து பட்டியலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சுக பிரசவம் குறித்த விவரங்களை அனைவரும் காணக்கூடிய வகையில் மருத்துவமனையின் வரவேற்பு அறையில் காட்சிப்படுத்த வேண்டும். தேவையான பெண்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உயர்ந்து வரும் அறுவை சிகிச்சை வீகிதத்தின் உறுதிபாடு மற்றும் பாதிப்பு ஆகியவற்றை கண்டறிதல் மற்றும் அப்பிரச்சினைகளுக்குகான சாத்திய தீர்வுகள் (Deciphering the Determination and Impacts of Rising Rate of C-Sections and offering Potential Solutions) என்ற அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தேவையற்ற சி-செக்க்ஷ்ன்ஸ் அறுவை சிகிச்சை குறித்து இந்தியாவின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் சமுகத்தினருக்கு கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, மாநிலங்கள் அவ்வப்போது இந்த பிரச்சனை குறித்த சுகாதார வசதிகளின் தணிக்கை செய்யவேண்டும். 


சமந்தப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனையை கையாள தகுந்த உத்தரவுகள் வழங்கியதிற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. மேனகா சஞ்சய் காந்தி மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் சிசேரியன் அறுவை சிகிச்சையை குறைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

 



(Release ID: 1495663) Visitor Counter : 66


Read this release in: English