நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி வெளியீடு - மறைமுக வரிவிதிப்பு வடிவமைப்பின் முழுமையான உருமாற்றம்; எவ்வாறு உருவானது என்பதற்குச் சில நுண்ணிய விவரங்கள்

Posted On: 30 JUN 2017 3:13PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.), ஒரு வரலாற்றுச் சிறப்பு சீர்திருத்தம், நாளையிலிருந்து, ஜூலை 1, 2017 முதல், செயல்பாட்டுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி. மத்திய, மாநில வரிவசூலை உள்ளடக்கிய மறைமுக வரிவிதிப்பு அமைப்பை நாட்டில் முழுமையாக உருமாற்றும். வழக்கமான முறையிலிருந்து மாறுபட்டு, ஜி.எஸ்.டி. மத்திய, மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும்.

 

 

இந்த வரலாற்று நிகழ்வைக் நினைவுகூரும் வகையில், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜூன் 30-ஜூலை 1, 2017 விழா ஒன்று நடத்தப்படும். இந்நிகழ்வு குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவை சபாநாயகர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள்.

 

 

ஜி.எஸ்.டி. ஏன் மிக முக்கியமானது?

 

சுதந்திரம் அடைந்தபின் இந்தியாவின் மிகப்பெரும் சீர்திருத்தம் இது ஒரு நாடு- ஒரு வரி, ஒரு சந்தை எனும் இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்; தொழில்துறை, அரசாங்கம் மற்றும் நுகர்வோர் என அனைத்து பங்குதாரர்களுக்கும் பலனளிக்கும்; சரக்கு மற்றும் சேவைகளின் கட்டணங்களைக் குறைக்கும்; பொருளாதாரத்தை உயர்த்தும்; உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டிக்குரியதாக்கும்; 'இந்தியாவில் தயாரி' கொள்கை முயற்சியை பெரும் அளவில் வளச்செய்யும். ஜிஎஸ்டி நடப்பின் கீழ், மத்திய மாநிலங்களுக்கு இடையிலான மறைமுக வரிகளின் உதிரித் தன்மையினால் சில வரிகளைத் திரும்பிச் செலுத்துதல் நடைபெறாமல் இருந்த முந்தைய நடைமுறைகளுக்கு மாறாக, ஏற்றுமதிகள் மொத்தத்தில் பூஜ்ய-வரிவிகிதமாக இருக்கும். பொருளாதாரத் தடைகளை விலக்கி, பொதுவான வரிவிகிதங்கள் மற்றும் நடைமுறைகளோடு இந்தியாவை ஒரு பொதுச்சந்தையாக உருவாக்கும். ஜி.எஸ்.டி. பெருமளவிலும் தொழில் நுட்பத்தால் இயங்கக்கூடியது என்பதால், மனித இடையீடுகளை பெருமளவில் குறைத்துவிடும். இந்தியாவில் தொழில் புரிவதை ஜி.எஸ்.டி. எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெருவாரியான சரக்கு விற்பனைகளில், ஜிஎஸ்டி ஆலோசனைக் குழுவால் ஒப்புதல் தரப்பட்ட வரிவிதிப்பு, தற்போதுள்ள மத்திய மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் மறைமுக கூட்டுவரி விகிதங்களைவிட [மத்திய கலால் வரிவிகிதங்கள்/ உள்பொதிந்த மத்திய கலால் வரிவிகிதங்கள்/ சேவைவரி அனுமதிக்குப் பின்பான வரி உள்பொதிவு, மதிப்புக்கூட்டு வரி விகிதங்கள் அல்லது பெருக்கப்பட்ட சராசரி மதிப்புக்கூட்டு வரி விகிதங்கள், கலால் வரிக்குமேல் தொடர்ந்து விழும் மதிப்புக்கூட்டுவரி மற்றும் மத்திய விற்பனை வரி, சரக்கு நுழைவு மாநில வரி போன்றவை மிகக் குறைவாகவே இருக்கும்.

 

I

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 2016க்குப் பின்பான ஜிஎஸ்டியின் பயணம்

 

குடியரசுத் தலைவரின் செப்டெம்பர் 8, 2016 ஆம் தேதி ஒப்புதலுக்குப் பிறகு 101வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 2016 நடைமுறைக்கு வந்தது. ஜி.எஸ்.டி. ஆலோசனைக்குழு செப்டெம்பர் 15, 2016 அன்று அமைக்கப்பட்டது.

 

செப்ம்பர் 2016 இல் அமைக்கப்பட்டதிலிருந்து, ஜிஎஸ்டி ஆலோசனைக்குழு 18 முறை சந்தித்தது. அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள், மாநில, மத்திய அரசுகளின் அதிகாரிகளுடன் விரிவான கூட்டங்களில் பங்கேற்று, இந்த வரலாற்று சிறப்பு வரி சீர்திருத்தத்தினை செயலாக்க சட்டம் மற்றும் நடைமுறைகளை வகுத்தனர். இது சுமார் 27000 மனித நேர கடுமையான உழைப்பைக் கொண்ட மாபெரும் பணியாகும். ஜி.எஸ்.டி. - யை விரைந்து செயல்படுத்த, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அதிகாரிகளின் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்தன

 

ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் விதிகள் செய்யும்போது 'வரி செலுத்துநர்களுக்கு வியாபாரத்தை எளிதாகச் செய்வதை' அதிகரிப்பது முக்கியமான எண்ணமாகக் கொண்டு, அந்த நோக்கிலேயே மாநில, மத்திய அரசின் பங்கும், பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டன. மிகக் குறுகிய காலத்தில், ஜி.எஸ்.டி. சட்டங்கள், ஜி.எஸ்.டி. விதிகள், வரிவிகித அமைப்புகளுக்கு.- இழப்பீடு வரிவசூல், சரக்கு மற்றும் சேவைகளை வெவ்வேறு வரிவிகித படிகளில் வகைப்படுத்தல், விலக்குகள், தொடக்கநிலை வரி அமைப்பு, வரி நிர்வாகத்துக்கான கட்டமைவு போன்றவற்றிற்கும் சேர்த்து. ஜி.எஸ்.டி. ஆலோசனைக்குழு ஒப்புதல் வழங்கியது. ஆலோசனைக்குழுவின் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டன. சட்டங்களையும், விதிகளையும் முறைப்படுத்துகையில், வணிகர்கள் மற்றும் தொழில் துறையினரோடு மற்ற முக்கிய பங்குதாரர்களையும் விரிவான பங்கேற்புடன் கூடிய ஆலோசனைகளைச் செய்யப்பட்டது. இணையதளத்தில் சட்டங்கள் மற்றும் விதிகளின் வரைவுகளை வெளியிட்டும், பொதுமக்களிடம் கருத்துகள் வரவேற்கப்பட்டும் எதிர்வினைகள் பெறப்பட்டன.

 

 

மார்ச் 29, 2017 அன்று, மத்திய நிதி அமைச்சர் நான்கு ஜிஎஸ்டி மசோதாக்களை - மத்திய சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017, யூனியன் பிரதேசங்கள் சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017, ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) மசோதா, 2017 - பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்காக மக்களவையில் முன்வைத்தார். அவற்றை மார்ச் 29, 2017 அன்று நாடாளுமன்ற மக்களவையும், ஏப்ரல் 6, 2017 அன்று மேலவையும் நிறைவேற்றின.

 

 

ஜி.எஸ்.டி. ஆலோசனைக்குழு ஜி.எஸ்.டி. - யின் இறுதிக் கட்டமைவை முடிவு செய்தது:

 

*மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி   விதிப்புலிருந்து விலக்குக்கான தொடக்க நிலை அளவு, சிறப்பு வகையினர் தவிர்த்த மற்றவர்க்கு ரூ.20 லட்சம்;  சிறப்பு வகையினருக்கு ரூ.10 லட்சம்.

 

*ஜி.எஸ்.டி. வரிகள் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரிவிகித அமைப்பாக ஏற்கப்பட்டது.

 

* மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, ஆடம்பர கார்கள், காற்றேற்றிய பானங்கள், பான் மசாலா, புகையிலை பொருட்கள் போன்ற சில சரக்குகளுக்கு ஜி.எஸ்.டி. வரியான 28%க்கும் மேல் கூடுதல் வரிகள் சுமத்தப்படும்.

 

*தொகுப்புத் திட்டத்தின் பலன் பெறுவதற்கு தொடக்கநிலை அளவு, சிறப்பு வகையினர் தவிர்த்த பிறர்க்கு, ரூ.75 லட்சம்; சிறப்பு வகையினர்க்கு ரூ.50 லட்சம். அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்தல் போதுமானது.

 

உணவு விடுதி தவிர்த்த சில வகை உற்பத்தியாளர்கள், சேவை வழங்குவோர் இந்த தொகுப்புத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

 

 

ஜி.எஸ்.டி. - யின் பிற முக்கிய அம்சங்கள்:

 

திருப்புத்தொகை குறித்த காலத்தில் வழங்காதபோது அதற்கான வட்டித்தொகை சேர்க்கவும், திருப்புத்தொகையை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் வகைசெய்கிறது.

 

· ஊடுருவல்களற்ற நிர்வாக செயல்பாடுகளை அடைவதற்கு, அனைத்து பரிமாற்றங்கள் மற்றும் செயல்முறைகளும் மின்னணு முறையினிலேயே செய்திட ஜி.எஸ்.டி. எதிர்நோக்குகிறது. இது வரி அதிகாரிகளோடு வரிசெலுத்துவோரின் நேரடித் தொடர்புகளை குறைக்கிறது.

 

· தன்னியக்கமாய் பூர்த்தியாகும் மாத மற்றும் வருடாந்திர செயல்பாட்டு அறிக்கைகள் தருவிக்கும் வசதிகளை ஜி.எஸ்.டி. வழங்குகிறது.

 

· வரிசெலுத்துவோருக்கு 60 நாட்களுக்குள் திருப்புத்தொகை வழங்கலை குறித்துக்காட்டுவதோடு, ஏற்றுமதியாளர்களுக்கு 7 நாட்களுக்குள் 90% இடைக்கால திருப்புத்தொகை வழங்கலை எளிதாக்குகிறது.

 

· வரிசெலுத்துவோருக்கு முந்தைய நடைமுறைகளில் இருந்து ஜிஎஸ்டி நடப்புக்கு எளிதாக மாறுவதை உறுதிப்படுத்த விரிவான முறைமாற்ற வழிவகைகள் மற்றும் இருப்பில் உள்ள சரக்குகளுக்கு வரவு பதிவாக்கும் முறையும் உள்ளன.

 

· ஜி.எஸ்.டி. நிறைவேற்ற மதிப்பெண் வழங்கல் போன்ற மற்ற வழிவகைகளும் உள்ளன.

 

· நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்திட முறையற்ற வருவாய் தவிர்ப்பு வழிவகைகளும் உள்ளன

 

 

ஜி.எஸ்.டி. வலைதளத்தின் (ஜி.எஸ்.டி.என்) பங்கு-- ஜிஎஸ்டியின் முதுகெலும்பாக தகவல் தொழில் நுட்பம் :

 

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தியோடு, .வரிசெலுத்துவோர்கள் கடந்து செல்லும் பொதுத்தளமாக செயல்படுவதற்காக, விதி எண் 25 கீழ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பொதுத்தளத்தில் வரிசெலுத்துவோர் தங்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அறிக்கைகள் பதிவிடவும் வரி செலுத்தவும், திருப்புத்தொகை கேட்பு பதிவிடவும் செய்யலாம்.

 

ஜி.எஸ்.டி.என் வலுவான தகவல் தொழில்நுட்ப தளத்தில் இயங்கும்; 80 லட்சம் வரிசெலுத்துநர்க்கும் ஆயிரக்கணக்கான வரி அதிகாரிகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றங்களை வழங்கும். ஜி.எஸ். - டியில் பதிவேற்றும் அனைத்தும் மின்னணு செயல்பாட்டிலேயே நடக்கும். ஜி.எஸ்.டி.என் முன்னணியில் இருக்க, பின்னணியில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் இருக்கும்; . வரி செலுத்துனர்களின் வரி அறிக்கைகளை சுமுகமான நேருக்கு நேர் பரிசீலனை செய்வதற்காக வெவ்வேறு மாநிலங்களும் ஜி.எஸ்.டி.என். தகவல் தொடர்பு வலைத்தளத்துடன் பரிமாற்றம் நிகழ்த்தும். பிப்ரவரி முதல் ஜூன் 2017 வரை 64,000 அதிகாரிகள் ஜி.எஸ்.டி. தளத்தில் பயிற்சி பெற்றிருக்கின்றனர். ஜி.எஸ்.டி.என் தகவல்தொடர்பு உபகரணங்கள் சுமை சோதனை, செயல்பாட்டு சோதனை, பாதிப்பு அம்ச சோதனைகள், பாதுகாப்பு மற்றும் பல கட்டாய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

 

ஏற்கனவே உள்ள மாநில வரி நிர்வாக மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய வரிசெலுத்துனர்களை ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்வது நவம்பர் 8, 2016 முதல் தொடங்கப்பட்டது. ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் 66 லட்சம் வரிசெலுத்துனர்களுக்கும் மேல் தங்கள் கணக்கை இயக்கநிலையில் வைத்துள்ளனர்.

 

கட்டணம் பெற்று ஜிஎஸ்டி விண்ணப்பங்கள் பெறுவது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. பொது இணையதளத்தோடு 25 வங்கிகள் ஜி.எஸ்.டி. -யுடன் ஒருங்கிணைக்கப்பட்டதால், இ-வரிசெலுத்தல் மற்றும் நேரடி வரிசெலுத்தல் வசதிகள் மற்றும் என்..எப்.டி/ஆர்.டி.ஜி.எஸ்., கிரெடிட்/டெபிட் அட்டைகள் மூலமாக வரிசெலுத்தல் வசதிகளையும் வழங்கப் பெறலாம்.

 

 

ஜி.எஸ்.டி. முழு அடைவுத் திட்டம்:

 

அரசாங்கம் ஜி.எஸ்.டி. விவரங்கள் மக்களைச் சென்று முழுமையாக அடைவதற்கு பல்வேறு நிகழ்வுகள், பட்டறைகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலமாக நடவடிக்கைகள் எடுத்தது. மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் கள அமைப்புகள் வணிகர்கள் மற்றும் தொழில்துறையினரோடு பரிமாற்றங்கள் புரிந்து ஜி.எஸ்.டி. - க்கு இடம்பெயர்வதற்கு உதவவும், அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும் அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஜி.எஸ்.டி. இடம்பெயர்வுக்கு உதவுவதற்காகவும், மாறுவதிலான பிரச்சினைகளைத் தீர்க்கவும்,

 

மத்திய மற்றும் சுங்க வாரியத்தின் களப் பிரிவுகள் மொபைல் வேன்களைப் பயன்படுத்தி தீர்வை செலுத்துநர்ளின் இடங்களுக்கே சென்றுபரப்புரை செய்தது. நாடெங்கும் மொத்தம் 4700 பட்டறைகள் நடத்தப்பட்டன.

 

 

ஜி.எஸ்.டி. - க்கு எளிதாக மாறவும், செய்திகளைத் தெரிவிக்கவும், கற்பிக்கவும், வரி செலுத்துநர்களுக்கும் மற்ற பங்குதாரர்களுக்கு உதவவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், பொதுவிடங்களில் விளம்பரப் பலகைகள் போன்றவை மூலமாக விரிவான பல்வகை ஊடகப் பரப்புரைகள் செய்யப்பட்டன.

 

 

மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் நிர்வாக ஒழுங்கமைப்பு:

 

ஜி.எஸ்.டி. - யை நிர்வாகிப்பதற்காக, சரியாக ஜிஎஸ்டியை செயலாக்கப்படுத்துவதற்கு மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தை மறுசீரமைப்பு செய்வது அவசியமானது. இந்த மறு சீரமைப்பு நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் மற்றும் பணிஇட இடம் மாற்றங்கள் கொண்டுவருவது ஆகியவற்றை உள்ளடக்கியது. நாட்டின் தூரத்து மூலை முடுக்குவரை சென்றடைய இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் ஜி.எஸ்.டி. - யில் முக்கிய பங்கு வகிக்கும் இயக்குநரகங்கள், போதுமான அளவு விரிவுபடுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

 

இதற்கான கள உருவாக்கங்களும் 21 சிஜிஎஸ்டி மற்றும் சிஎக்ஸ் மண்டலங்கள், 107 சி.ஜி.எஸ்.டி. மற்றும் சி.எக்ஸ் . ஆணையகங்கள், 768 சி.ஜி.எஸ்.டி மற்றும் சிஎக்ஸ் பகுதிகள், 3969 வரம்பெல்லைகள், 48 தணிக்கை ஆணையகங்கள் மற்றும் 49 மேல்முறையீடு ஆணையகங்கள்.

 

பயிற்சி

 

ஜி.எஸ்.டி. -யை எளிதாக அறிமுகப்படுத்துவதற்கு, போதுமான திறன் உருவாக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கட்டாயமாகும். சுங்க மறைமுக வரிகள் மற்றும் நார்கோடிக்ஸ் தேசிய அகாதெமி (நாஸின்) விரிவான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது. முதல் கட்ட தில், நாடெங்கும் பல அடுக்கு பயிற்சி நிகழ்வுகள் மூலமாக செப்டெம்பர், 2016 முதல் ஜனவரி 2017 வரை 52,000 க்கும் மேல் அலுவலர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்

 

அண்மைக்காலம் வரையிலான சட்டம், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீது ஒரு ஒரு புதுப்பிப்பு பயிற்சி நடத்தப்பட்டது; மொத்தம் 17,213 அலுவலர்கள் ஜூன் 23, 2017 வரை பயிற்றுவிக்கப்பட்டனர்.

 

சான்றளிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பயிற்சித் திட்டத்தின் கீழ், வணிகர், தொழில் துறையினர் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகளுக்கு 'சரியான கட்டணத்தில் தரமான பயிற்சி' தருவதற்காக, 20 பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பங்குதாரர்களாக சான்றளிக்கப் பட்டிருக்கின்றனர். இதுவரை 2565 பங்கேற்பாளர்கள் பயிற்சி தரப்பட்டிருக்கின்றனர்; இன்னும் தொடர்கிறது. நாஸின் இதுவரை, 92 அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் 2,611 அதிகாரிகளைப் பயிற்றுவித்திருக்கிறது.

 

அதுமட்டுமன்றி, ஆங்கிலம், இந்தி மற்றும் 10 மாநில மொழிகளில் 'அடிக்கடி கேட்கப்படும் ஐயங்கள் 500' பயிற்சி சாதனமாக வெளியிடப்பட்டது. வணிகம் மற்றும் தொழில் துறைக்குப் பரப்புவதற்காக, ஜி.எஸ்.டி. - யின் பலதரப்பட்ட தலைப்புகளில் ஜி.எஸ்.டி. கொள்கைகளை விளக்கும் எண்ணற்ற துண்டுப் பிரசுரங்கள், பவர் பாயிண்ட் திரையியீடுகள், ஜி.எஸ்.டி. பயிற்சிக்காக கற்பிக்கும் காணொளிகள் மற்றும் அலுவலர்களுக்காக மற்ற பயிற்சிப் பொருட்கள் ஆகியவை வெளியிடப்பட்டன.

 

சமூக ஊடகங்கள் மூலமாக சேவைகள்:

 

வரி செலுத்துவோரின் ஐயங்களுக்கு இயல்பான நேர அடிப்படையில் விளக்கங்கள் வழங்க அரசாங்கத்தால் ஒரு டுவிட்டர் சேவை தொடங்கப்பட்டது. Ask GST_GOI எனும் இந்த டுவிட்டர் சேவை, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோர் கேள்விகளை கையாண்டு இருக்கிறது. டுவிட்டரில் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்ட 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின்' பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

 

 

*****



(Release ID: 1494579) Visitor Counter : 527


Read this release in: English