தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (தொ. வ. வை. அ) நகர்ப்புற வீட்டுவசதி வளர்ச்சி நகரப்பேரவையுடன்(ந. வீ. வ. ந. பே) புரிந்துணர்வு ஒப்பந்தம் தொ.வ. வை. நி. புதிய வீட்டுவசதித் திட்டம் மற்றும் பல்வகை முன்ஒதுக்கீடு சட்டம் – 1952 ன் கீழ் செய்து கொள்கிறது.
Posted On:
23 JUN 2017 5:21PM by PIB Chennai
முனைவர் வி.பி. ஜாய், மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர் மற்றும் முனைவர் எம். இரவி காந்த், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ந.வீ.வ. ந.பே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் நகர்ப்புற வளர்ச்சி , வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற ஏழ்மை நீக்கம், திரு எம். வெங்கையா நாயுடு மற்றும் மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு திரு பண்டாரு டட்டாட்டிரியா, மதிப்பு மிக்க அவர்களின் முன்னிலையில் ‘2022 ல் எல்லோருக்கும் வீடு’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று கையெழுத்து இட்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2022 ல் எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தை நடைமுறை படுத்தும் பொருட்டு ஒரு அடி முன்னோக்கி வைக்க, தொ. வ.வை.அ தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது - பார்க்கவும் கெசட் அறிவிப்பு எண் ஜி. எஸ். ஆர் 351(இ) நாளிட்ட 12 ஏப்ரல் 2017. நிதிஉதவி கட்டுமான விலையில் உள்ள வீடுகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் வாங்குவதற்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருங்கால வைப்பு நிதியிலிருந்து மொத்தம் சேர்ந்துள்ள தொகையில் 90% எடுத்துக்கொள்வதற்கும் மற்றும் வீட்டுக்கடனின் தவணைகளை அளிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ஏற்றவாறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்களை ஒருங்கிணைத்து உதவி நல்குதல் ஆகும்.
இத்திட்டத்தின் முக்கியக் கூறுகள் பின்வருமாறு:
1 இதோடு தொடர்புடைய அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவந்து, பெயரளவில், தொழிலாளர்கள், வேலைவழங்குபவர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீடு கட்ட உதவிடும் அமைப்புகள் ஆகிய அனைவரும் அல்லது அனைத்தும் தொழிலாளர்களின் வீட்டுத்தேவையை நிறைவேற்றிட உதவுவது.
2 ஒன்றிணைந்து செயல்பட வீட்டுவசதி சங்கங்களை அமைத்தல், பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையோர் ஒருசங்கமாக பதிவு செய்து கொள்ளலாம். தனிப்பட்டோர் அல்லது பொது வீட்டு வசதி அளிப்பவரிடமிருந்து சங்கம் வீடு அமைப்புகளை பெறுவதற்கு ஏற்பாடு செய்யும். மற்றும் சங்கம் மூலமாக தொடர்புடைய வைப்புநிதி அலுவலகத்துக்கு நிதிச் சான்றிதழையும்மற்றும் நிதி உதவியையும் பெற உதவும்.
3 தொழிலாளர் வைப்பு நிதிச் சேமிப்பை போதுமான விலை கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளை தொழிலாளர்களுக்காக கட்டவும், சேர்ந்துள்ளதில் 90% சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகின்றன.
4 வங்கிகள்/ நிதி உதவும் அமைப்புகள் ஆணையரால் அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை எளிய மாதத் தவணைகளை நிர்ணயித்து பத்தி 68 பி. டி(3)தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வழி வகுக்கிறது.
5 முழுமையாக / பகுதியாக மாதா மாதம் செலுத்தும் பி. எஃப். தொகையிலிருந்து எடுத்து கடனைத் திருப்பிக்கட்டுதல்
6 தகுதிக்கானவிதி அத்தகைய திரும்ப எடுத்துக்கொள்ளலுக்காக தளர்த்தப்பட்டிருக்கிறது, ஈபிஎஃப் காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 மூன்றுஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
7 உறுப்பினர்கள் வட்டிக்கான நிதி உதவி 2.20 இலட்சம் வரை வரவோடு இணைந்த நிதி உதவித் திட்டம் (சிஎல் எஸ் எஸ்) வீட்டு வசதி மற்றும் நகர்புற ஏழ்மை நீக்கும் அமைச்சகம் மூலமாக அதனின் தலைமை அமைப்புக்களான ஹட்கோ மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி உதவியுடன் உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா என்ற திட்டத்தில் குறிப்பிடப்பட்டடுள்ள தொகைக்குக் குறைவாக இருந்தால் வழங்கப்படுதல்
8 தனி ஒருவரின் வீட்டுக்கடன் திரும்பக்கட்டுதலுக்கு ஈ. பி. எஃப். ஒ க்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டிருந்தால் அந்நிறுவனமே கடனளித்துள்ள அமைப்புக்கு மாதத்தவணைகளை கட்டிவிடும்.
******
(Release ID: 1493693)
Visitor Counter : 121