ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் பார்வையில் தூய்மை இந்தியா என்பது ஒரு புதுவகைப் புரட்சி
ஜவுளித்துறை அமைச்சகத்தின் இருவார தூய்மை இயக்கம் குறித்து ஊடகங்களுக்கு திரு அஜய் தம்தா விளக்குகிறார்.
Posted On:
19 JUN 2017 5:39PM by PIB Chennai
ஜவுளித்துறையின் மத்திய இணை அமைச்சர், திரு அஜய் தம்தா, இந்தியக் குடிமக்கள் அனைவரையும் தூய்மை குறித்தச் செய்தி சென்று சேர வேண்டும் என்றார்; அனைவரும் ஈடுபாட்டுடன் பங்கேற்றால்தான் தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெரும் என்பதை அனைவரும் உணரவேண்டும். பிரதமரின் பார்வையில், மத்திய அரசும் சமதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் ’தூய்மை இந்தியா’விற்காக ஒருங்கிணைந்து செயலாற்றுகிறார்கள். அவர்களின் ஆதரவிற்காக ஊடகங்களுக்கு நன்றி கூறிய திரு அஜய் தம்தா, மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றார். அப்போதுதான் அனைத்து நாடுகளும் இந்தியாவில் ஒரு புதிய புரட்சி பரவத் தொடங்கியிருப்பதை உணர்வார்கள்.
நாடெங்கும் ’இருவார தூய்மை இயக்கம்’ கடைபிடித்தல் பற்றி ஊடகங்களுக்கு விளக்கும் போது, ஜவுளித்துறை அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய திரு அஜய் தம்தா, அவரது அமைச்சகத்தின் கீழ் வரும் 17 அமைப்புகளும் தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் சொல்லிலும் செயலிலும் ஈடுபட்டிருப்பதாக கூறினார். அலுவலகங்கள், ஆலைகள், ஜவுளித்துறைப் பணியாளர்களின் குடியிருப்புப் பகுதிகளில் சுத்தம் செய்தலும் அதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் உள்ள ஆடை வடிவமைப்பு தேசிய நிறுவனங்களின் மாணவர்கள், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருடன் இணைந்து, பொது இடங்களை சுத்தம் செய்தல், தூய்மை குறித்தச் செய்திகள் நிறைந்த ஓவியங்களால் பொதுச் சுவர்களை அலங்கரித்தல் போன்றப் பணிகளை ஆற்றியுள்ளனர். இருவாரத் தூய்மை இயக்க்க் காலத்தில், 2000க்கும் மேற்பட்ட தேவையற்ற பழைய கோப்புகளை அகற்றியிருக்க்கும் பணியாளர்களுக்கு அமைச்சர் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சகத்தால் எடுக்கப்பட்டத் தூய்மை குறித்த விடியோ பாடலொன்றும் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
இது மட்டுமின்றிகழிவுகள் மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த கண்காட்சி (மத்திய அரசின் பட்டு வாரியம் ஏற்பாட்டில்), மரங்கள் நடுதல், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சுகாதாரம் மற்றும் சுத்தம் குறித்த முகாம்கள், விவாதங்கள், பிரச்சார வாசகங்கள் எழுதும் போட்டிகள் வீதி நாடகங்கள், மனிதச் சங்கிலி இயக்க்ங்கள், பாத யாத்திரைகள் மற்றும் ஓவியப்போட்டிகள் போன்றவை பல்வேறு இடங்களில் இருவார தூய்மை இயக்கத்தினை ஒட்டி நடந்துள்ளன.
ஊடகங்களுக்கான விவரிப்பின்போது தூய்மை குறித்த சிறு கவிதை ஒன்றையும் திரு.தம்தா படித்தார்.
“புது யுகம் ஒன்றைப் படைப்போம்,
தூய்மையே நம் பெருமிதம்.
தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் நம் இந்தியா
இதுவே நமது பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம்
மூக்குக் கண்ணாடிகளின் வழியே
தூய்மை இந்தியாவைக் கனவு கண்டார் அவர்
நம் பங்களிப்பை அவர் எதிர் நோக்கினார்
நம் பாபுவின் கனவை நீங்களும் காணுங்கள்
இந்தியாவிற்கு புதிய அழகை புதிய வடிவை அளிப்போம்.”
ஜவுளித்துறைச் செயலர் திரு அனந்த் குமார் சிங், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி, திரு அக்ஷய் ரவ்த் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜவுளித்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட அமைப்புகளின் இயக்கங்கள் அனைத்தையும், தூய்மை இயக்கம் என்பது ஒரு வாழும் முறை என்ற அடிப்படையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்படும். இதனைக் கருத்தில்கொண்டு தூய்மையை வலியுறுத்தும் ஒரு விரிவான செயல்திட்டம் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தேவைப்படும் நிதி விவரம் கீழே அளிக்கப்பட்டுள்ளது.
திட்டச் செலவு (இலட்சத்தில்)
|
2017-18
|
2018-19
|
2,012.48
|
2,384.3
|
*******
(Release ID: 1493372)
Visitor Counter : 266