மத்திய அமைச்சரவை

இந்தியாவில் எண்ணெய் பனை விளைவிக்கப்படும் பகுதி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 APR 2017 4:48PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் எண்ணெய் பனை விளைவிக்கப்படும் பகுதியையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகளாவன:

  1. எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனைக்கான தேசிய திட்டத்தின் கீழ் (NMOOP-National Mission on Oilseeds and Oil Palm), எண்ணெய் பனை சாகுபடி செய்வதற்கான நில வரம்பில் சலுகை

எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் பனைக்கான தேசிய திட்டத்தின் கீழ் (NMOOP-National Mission on Oilseeds and Oil Palm), உதவித்தொகை வழங்குவதற்கான நில அளவு 25 ஹெக்டேருக்கும் மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எண்ணெய் பனை உற்பத்தியில் தொழில் நிறுவனங்களை ஈர்க்கவும், அதிகபட்சமாக 100% அந்நிய நேரடி முதலீட்டை பயன்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  1. என்.எம்.ஓ.ஓபி - யின் சிறு திட்டம்-2-ன் கீழ், உதவித் தொகை வழங்குவதற்கான விதிகள் மாற்றியமைப்பு

எண்ணெய் பனை விளைவிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பயிரிடுவதற்கான பொருட்கள், பராமரிப்பு செலவு, ஊடுபயிருக்கான செலவு (inter-cropping cost), ஆழ்துளைக் கிணறு அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விதிகளை மாற்றியமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த நடவடிக்கைகளால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்:

 

  மிகப்பெரும் அளவில் பனை எண்ணெய் பயிரிடுவதற்கு, தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், தரிசு  நிலங்கள் பயன்படுத்தப்படும். என்.எம்.ஓ.ஓபி. திட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம், எண்ணெய் பனை பயிரிடுவதில் தனியார் நிறுவனங்கள்/கூட்டுறவு அமைப்புகள்/கூட்டு நிறுவனங்கள் ஆகியவை ஆர்வம் காட்டும். மேலும், என்.எம்.ஓ.ஓபி. உதவியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

 

எண்ணெய் பனையை விளைவிப்பதில், விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஊக்குவிக்கப்படுவார்கள். செலவுக்கான விதிகளை மாற்றியமைப்பதால், எண்ணெய் பனை பயிரிடுவதில் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.  

 

செலவு விதிகளை மாற்றியமைப்பதற்கான மாநில/அமைப்புகளின் ஆண்டு செயல் திட்டத்துக்கு வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை ஒப்புதல் அளிக்கும். தங்களது மாநிலங்களில் எண்ணெய் பனை விளைவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள்/கூட்டுறவு அமைப்புகள்/கூட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசுகள் கோரிக்கைகளைப் பெறும்.

 

தற்போதைய நிலையில், இந்தத் திட்டம் 12 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மிசோரம், ஒடிசா, கேரளா, தெலங்கானா, சத்திஸ்கர், குஜராத், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த 12 மாநிலங்களில் உள்ள சுமார் 133 மாவட்டங்களில் எண்ணெய் பனை விளைவிக்கப்படுகிறது. எனினும், எண்ணெய் பனை விளைவிக்கும் திறன்பெற்ற அனைத்து மாநிலங்களிலும் என்.எம்.ஓ.ஓபி. திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

பயிரிடும் நிலப்பகுதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாலும், மானிய அளவை அதிகரிப்பதாலும் நிதி பாதிப்புகள் ஏற்படும். எனினும், இந்த நிதி பாதிப்புகள், என்.எம்.ஓ.ஓபி. நிதியிலேயே ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, கூடுதல் நிதி எதுவும் தேவைப்படாது.

 

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் எண்ணெய் பனை விளைவிக்கப்படும் நிலப்பகுதி மற்றும் நிதியில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த விவரங்களை கீழே காணலாம்:

 

ஆண்டு

 

திட்டத்தின் பெயர்

எண்ணெய் பனை

பகுதி விரிவாக்க அளவு (ஹெக்டேர்)

தொகை

(ரூ. லட்சங்களில்)

இலக்கு

 

நிறைவேறியது

 

ஒதுக்கீடு/ விநியோகம் செய்யப்பட்ட அளவு

2012-13

 

ஐ.எஸ்.ஓ.பி.ஓ.

எம் மற்றும்

ஓ.பி.ஏஈ.

49932

 

26300

 

22705.74

 

6412.62

 

2013-14

 

ஐ.எஸ்.ஓ.பி.ஓ.

எம் மற்றும்

ஓ.பி.ஏஈ.

41347

23183

 

19776.19

 

11849.09

 

2014-15

 

என்.எம்.ஓ.ஓபி.

28146

 

17143

 

7290.58

 

4112.47

 

2015-16

 

என்.எம்.ஓ.ஓபி.

 

27337

 

14425

 

6683.80

 

3823.49

 

2016-17*

 

என்.எம்.ஓ.ஓபி.

 

30061

 

9968

 

8038.68

 

4241.57

 

* டிசம்பர் 2016 வரை

 

தற்போதைய நிலையில், எண்ணெய் பனை வளர்ச்சித் திட்டம், தனிநபர் விவசாயிகளின் நிலங்களில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள்/கூட்டுறவு அமைப்புகள்/கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மிகப்பெரும் அளவில் பயிரிடுவதற்காக நேரடியாக நிதியுதவி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. எண்ணெய் பனை விளையும் மாநிலங்களில் தரிசு நிலம்/தரம் குறைந்த நிலம்/விளைவிக்கப்படும் நிலம் ஆகியவற்றை எண்ணெய் பனை விளைவிப்பதற்காக தனியார் நிறுவனங்கள்/கூட்டுறவு அமைப்புகள்/கூட்டு நிறுவனங்கள் குத்தகை அல்லது வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம். அல்லது நிலத்தை வாங்கிக் கொள்ளலாம். எனினும், என்.எம்.ஓ.ஓபி. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி, 25 ஹெக்டேருக்கு வழங்கப்படுகிறது. எனவே, எண்ணெய் பனை உற்பத்தியில் தொழில் நிறுவனங்களை ஈர்க்கவும், 100% அந்நிய நேரடி முதலீட்டின் பலன்களைப் பெருமளவில் பெறவும், என்எம்ஓஓபி திட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தனிநபர் வேளாண்மை, ஒப்பந்த வேளாண்மை, கட்டாய வேளாண்மை (captive plantation) (நில வரம்பு விதிகளை தளர்த்துவதன் மூலம்) ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலமே, நாட்டில் எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்க முடியும்.

பல்வேறு நிலைகளிலும் நிதியுதவி வழங்குவதற்கான விதிகள், என்எம்ஓஓபி திட்டம் வகுக்கப்பட்டபோது, நிலவிய விலையின் அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டது. பயிரிடுவதற்கான பொருட்கள், குழிகளை தோண்டுவது, பயிரிடுவது, எரு இடுதல், நீர்ப்பாய்ச்சுதல், எந்தவொரு வருமானமும் இல்லாமல் 4 ஆண்டுகளுக்கு தோட்டத்தை பராமரிப்பது ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், எண்ணெய் பனை விளைவிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அதோடு, எண்ணெய் பனை விளைவிப்பதற்கு சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ள வடகிழக்கு மாநிலங்களில், மலைப்பிரதேச நிலப் பகுதிகளை விவசாயப் பகுதிகளாக மாற்றுவதற்கு கூடுதலாக முதலீடு தேவைப்படுகிறது.

 

பின்னணி:

 

வீடுகளில் உணவு தயாரிப்பதற்கு சமையல் எண்ணெய் முக்கியப் பொருளாக விளங்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் உற்பத்தி 90 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால், உள்நாட்டுத் தேவை சுமார் 2.5 கோடி மெட்ரிக் டன்னாக உள்ளது. தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையேயான இடைவெளி, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது, 2015-16-ம் ஆண்டில் ரூ.68,000 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டது. காய்கறி எண்ணெய் இறக்குமதியில் பனை எண்ணெய் மட்டுமே 70 சதவீதமாக உள்ளது. இது ஒவ்வொரு ஹெக்டேருக்கும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பொருள் என்பதால், மிகவும் மலிவான எண்ணெயாக உள்ளது.

 

காய்கறி எண்ணெயில், ஒவ்வொரு ஹெக்டேருக்கும்  விளையும் அளவின் அடிப்படையில், உலகில் மிகவும் அதிக அளவில் உற்பத்தியாகும் பயிர்களில் ஒன்றாக எண்ணெய் பனை உள்ளது. உலகில் காய்கறி எண்ணெயில் மிகப்பெரும் ஆதாரமாக இன்று எண்ணெய் பனை விளங்குகிறது. எண்ணெய் பனை உற்பத்தியில் மலேஷியா, இந்தோனேஷியா, நைஜீரியா, தாய்லாந்து, கொலம்பியா ஆகியவை முக்கிய நாடுகளாக உள்ளன. எண்ணெய் பனையை விளைவிப்பதன் மூலம், சராசரியாக ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 4-5 டன் எண்ணெய் கிடைக்கிறது. மற்ற வகை எண்ணெய் உற்பத்தி ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 1.3 டன்களாக மட்டுமே உள்ளது.

எண்ணெய் பனை உற்பத்தியை ஊக்குவிக்க 1986-87 முதலே பல்வேறு திட்டங்களையும், 2014-15-ம் ஆண்டு முதல் என்.எம்.ஓ.ஓபி. திட்டத்தையும் இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2016-17-ம் ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 1.25 லட்சம் ஹெக்டேரில் எண்ணெய் பனை விளைவிக்கச் செய்வதே என்.எம்.ஓ.ஓபி. திட்டத்தின் இலக்கு. துறைசார்ந்த முயற்சிகள் மூலம், 1991-92-ல் 8,585 ஹெக்டேராக இருந்த எண்ணெய் பனை விளைவிக்கப்படும் நிலத்தின் அளவு, 2015-16 இறுதியில் சுமார் 3 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதேநேரத்தில், பனை பழ கொத்துக்கள் (fresh fruit bunches), கச்சா பனை எண்ணெய் (crude palm oil) ஆகியவற்றின் உற்பத்தி முறையே, 1992-93-ம் ஆண்டில் 21,233 டன் மற்றும் 1,134 டன்களாக இருந்தது. இது 2014-15-ம் ஆண்டில் 11,50,000 டன்கள் மற்றும் 1,98,000 டன்களாக உயர்ந்துள்ளது.

*****


(Release ID: 1487875) Visitor Counter : 177
Read this release in: English