Others

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பி.எஸ்.என்.எல் வழங்கும் சிறப்பு சிம் கார்டுகள்

Posted On: 08 JUL 2019 5:59PM by PIB Chennai

காஷ்மீரில், இமயமலையில் அமைந்துள்ள புனித அமர்நாத் குகைக் கோயில் சன்னதிக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு உதவும் வகையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ஜம்மு காஷ்மீர் தொலைத் தொடர்பு வட்டம், இலகுவான தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் வகையில், 01.07.2019 முதல் 15.08.2019 வரை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வழக்கமாக பிற மாநில ப்ரீ பெய்டு செல்போன் இணைப்புகளை பயன்படுத்த ஜம்மு காஷ்மீரில் அனுமதி இல்லை என்பதால், உள்துறை மற்றும் தொலைத் தொடர்புத்துறை அனுமதியுடன், முன்கூட்டியே திறன் ஏற்றப்பட்ட சிறப்பு யாத்ரா சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. ரூ.230 (சிறப்புக் கட்டண வவுச்சர் மற்றும் பிளான் வவுச்சர் விலைகள் உட்பட) விலை உள்ள யாத்ரா சிம் கார்டு பெறுவோருக்கு, 20,000 வினாடிகள் இலவச டாக் - டைம், 1.5 GB இலவச டேட்டா, போன்ற வசதிகள் பத்து நாட்களுக்கு செல்லத்தக்க வகையில் கிடைக்கும்.

    இந்த யாத்ரா சிம் கார்டுகளைப் பெற, முகவரிச் சான்று, அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றுடன் SASB அளித்துள்ள யாத்ராவுக்கான பதிவுச் சீட்டில் உண்மை நகலையும் சான்றாக அளிக்க வேண்டும்.

     இந்த யாத்ரா சிம் கார்டுகள், லகன்பூர் பேஸ் கேம்ப் சுற்றுலா பயண வரவேற்பு மையம், பகவதி நகர் ஜம்மு பேஸ் கேம்ப், கச்சி சாவ்னி ஜம்மு மெயின் எக்ஸ்சேஞ்ச் பில்டிங் வாடிக்கையாளர் சேவை மையம், திரிகூட நகர், RBI பில்டிங் அருகில் உள்ள மெயின் எக்ஸ்சேஞ்ச் வாடிக்கயாளர் சேவை மையம்,  பல்டால் மற்றும் பாகல்காம் பேஸ் கேம்ப்,  ஸ்ரீநகர் ரயில் நிலையம் அருகில் உள்ள நவ்காம் சுற்றுலா பயண வரவேற்பு மைய அலுவலகங்களில் கிடைக்கும்.

   யாத்ரீகர்கள் அனைவரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முன்கூட்டியே திறனேற்றப்பட்ட சிறப்பு யாத்ரா சிம் கார்டுகளை, மேற்குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட கவுண்டர்களில் மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கூடுதல் விவரங்களுக்கு http://www.jandk.bsnl.co.in/yatra.html  என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளுமாறு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் புதுதில்லி தலைமையக வர்த்தக பிரிவு துணைப் பொது மேலாளர் திரு ஏ கே கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

----



(Release ID: 1577810) Visitor Counter : 24

Read this release in: English