PIB Headquarters

பொள்ளாச்சி – ஒரு பார்வை

Posted On: 29 MAR 2019 5:11PM by PIB Chennai
  • 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. தாமோதரன் 93,405 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 44.40 சதவீதமாகும்.
  • 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. பி ஆர் ராமகிருஷ்ணன் 1,39,984 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 53.10 சதவீதமாகும்.
  • 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட திரு. சி. சுப்பிரமணியம் 1,76,512 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 56.40 சதவீதமாகும்.
  • 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. நாராயணன் 2,37,035 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 58.56 சதவீதமாகும்.
  • 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. நாராயணன் 2,67,811 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 64.66 சதவீதமாகும்.
  • 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு கே ஏ ராஜு 2,59,388 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 64.48 சதவீதமாகும்.
  • 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. சி டி தண்டபாணி 2,33,261 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 51.41 சதவீதமாகும்.
  • 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்ட திரு. ஆர் அண்ணாநம்பி 3,24,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 59.27 சதவீதமாகும்.
  • 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. பி ராஜா ரவிவர்மா 4,28,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 67.28 சதவீதமாகும்.
  • 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. பி ராஜா ரவிவர்மா 4,14,810 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 65.65 சதவீதமாகும்.
  • 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமாகா (மூ) வேட்பாளராகப் போட்டியிட்ட திரு.வி கந்தசாமி 3,61,743 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 55.18 சதவீதமாகும்.
  • 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. எம் தியாகராஜன் 3,06,083 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 55.22 சதவீதமாகும்.
  • 1999-ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட  டாக்டர் சி கிருஷ்ணன் 2,93,038 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 48.63 சதவீதமாகும்.
  • 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் சி கிருஷ்ணன் 3,64,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 56.76 சதவீதமாகும்.
  • 2008-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையில் பொள்ளாச்சி   மக்களவைத் தொகுதியில் தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்  பெற்றுள்ளன.
  • 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கே சுகுமார் 3,05,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 39.67 சதவீதமாகும்.
  • 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. மகேந்திரன் 4,17,092 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.72 சதவீதமாகும்.
  • 2014 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் நோட்டாவிற்கு 12,947 வாக்குகள் கிடைத்தன.

 

*****



(Release ID: 1569839) Visitor Counter : 225