PIB Headquarters

தென்சென்னை - ஒரு பார்வை

Posted On: 26 MAR 2019 6:06PM by PIB Chennai
  • தென்சென்னை மக்களவைத் தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்ப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.

 

  • ஒரே தொகுதியாக இருந்த சென்னை மக்களவைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 1957-ஆம் ஆண்டு தென்சென்னை தொகுதி உருவாக்கப்பட்டது. முன்பு இது மெட்ராஸ் தெற்கு என அழைக்கப்பட்டது.

 

  • 1956-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி சென்னை மாநகரின் கீழ்பாக்கம், வேப்பேரி, பெரியமேடு, பூங்காநகர், நேப்பியர் பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம்,  கோடம்பாக்கம், தியாகராயநகர்–வடக்கு, ராயப்பேட்டை, புதுப்பாக்கம். திருவேட்டீஸ்வரன்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், மீர்சாஹிப்பேட்டை, மயிலாப்பூர் – தெற்கு,  மயிலாப்பூர்-வடக்கு, தேனாம்பேட்டை, தியாகராயநகர்ஸ்ரீ- தெற்கு, சைதாப்பேட்டை, கிண்டி மற்றும் அடையாறு இத்தொகுதியில் சேர்க்கப்பட்டன.

 

  • 1957-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட திரு டி டி கிருஷ்ணமாச்சாரி 81,390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 45.93 விழுக்காடாகும்.

 

  • 1961-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி இத்தொகுதியுடன் ஆயிரம் விளக்கு, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலப்பூர். தியாகராயநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன.

 

  • 1962-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளரான திரு கே மனோகரன் 1,51,917 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 44.73 விழுக்காடாகும்.

 

  • 1967-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி ஆயிரம் விளக்கு, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலப்பூர். தியாகராயநகர் சைதாப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன

 

  • 1967-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரு சி என் அண்ணாதுரை திமுக வேட்பாளராக போட்டியிட்டு 2,48,099 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில்   59.38 விழுக்காடாகும்.

 

  • 1971-ல் நடைபெற்ற தேர்தலில் திரு முரசொலி மாறன் திமுக வேட்பாளராக போட்டியிட்டு 2,53,626 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52.09 விழுக்காடாகும்.

 

  • 1976-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தியாகராயநகர் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன

 

  • 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் திரு ஆர் வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 2,41,033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 50.79 விழுக்காடாகும்.

 

  • 1980-ல் நடைபெற்ற தேர்தலில் திரு ஆர் வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரஸ் (இ) வேட்பாளராக போட்டியிட்டு 3,28,836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில்   60.34 விழுக்காடாகும்.

 

  • 1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருமதி வைஜெயந்தி மாலா இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 3,36,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 51.92 விழுக்காடாகும்.

 

  • 1989-ல் நடைபெற்ற தேர்தலில் திருமதி வைஜெயந்தி மாலா பாலி இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 4,45,864 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில்   53.91 விழுக்காடாகும்.

 

  • 1991-ல் நடைபெற்ற தேர்தலில் திரு ஆர் ஸ்ரீதரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 4,18,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 56.66 விழுக்காடாகும்.

 

  • 1996-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரு டி ஆர் பாலு திமுக வேட்பாளராக போட்டியிட்டு 5,38,697  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 61.97 விழுக்காடாகும்.

 

  • 1998-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரு டி ஆர் பாலு திமுக வேட்பாளராக போட்டியிட்டு 4,32,913 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 48.17 விழுக்காடாகும்.

 

  • 1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திரு டி ஆர் பாலு திமுக வேட்பாளராக போட்டியிட்டு 5,62,221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 60.03 விழுக்காடாகும்.

 

  • 2004-ல் நடைபெற்ற தேர்தலில் திரு டி ஆர் பாலு திமுக வேட்பாளராக போட்டியிட்டு 5,64,578 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 60.41 விழுக்காடாகும்.

 

  • 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன

 

  • 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடாகும்.

 

  • 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டாக்டர்  ஜெயவர்தன்  அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.

 

  • 1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார்.

 

 



(Release ID: 1569500) Visitor Counter : 445