Print
XClose
Press Information Bureau
Government of India
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
26 DEC 2018 4:36PM by PIB Chennai
2018 ஆண்டு இறுதி அறிக்கை: திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் திறன் அமைச்சகம்

திறன் இந்தியா – 2018 முக்கிய அம்சங்கள்

         

          2014-லில் தோற்றுவிக்கப்பட்ட திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் அமைச்சகம் இந்த ஆண்டு தனது 4-வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  அமைச்சகம் தனது தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்பு திட்டத்தின்கீழ், அனைத்து திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் ஒருமுகப்படுத்தி, செயல்பட்டு வருகிறது.  திறன் இந்தியா திட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து பயிற்சிபெற்று பயனடைந்து வருகிறார்கள்.  திறன் இந்தியா திட்டம் இந்த அமைச்சகத்தின் கீழ், மக்கள் இயக்கமாக உருவெடுத்து இளைஞர்கள் திறன்பெற்று மேலும் சிறப்பான வாழ்வாதாரத்தை அடைய உதவுகிறது.

     திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் திறன் அமைச்சகத்தின் சில முக்கிய சாதனைகள் வருமாறு:- 

 

கொள்கை, கட்டமைப்பு, தரங்கள்  

  • தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் கொள்கை 2015-ல் தொடங்கப்பட்டது.
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2015-ல் தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
  • பயிற்சிக் கட்டணம், நடைமுறைகள், மதிப்பீடு, சான்றளிப்பு உள்ளிட்ட பொது நெறிகள் 2015-ல் தொடங்கப்பட்டது.
  • பொது நெறிகள், இதர அமைச்சகங்களின் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • தேசிய திறன் தகுதி கட்டமைப்பு அமலாக்கத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் தகுதிகள் உருவாக்கப்பட்டன.

 

II   திட்டங்கள் மற்றும் முயற்சிகள்

 

பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம் இந்த அமைச்சகத்தின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று, இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு 220-க்கும் மேற்பட்ட துறைகளில் இலவச பயிற்சி, குறுகிய காலமான இரண்டு மாதங்கள் முதல் ஆறு மாத காலம் வரை அளிக்கப்படுகிறது.

 

  • பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் திட்டத்தின் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாதிரி பயிற்சி மையங்களாக சிறந்த அடிப்படை வசதிகளுடன் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
  • தேசிய பணிபயில்பவர் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கு பணி வழங்கி அதன்மூலம் பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது.
  • கல்வி சமநிலை உருவாக்குதல் திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சிக்கு சமமான ஏட்டு கல்வி அமைப்பின் நிலைகள் ஏற்படுத்தப்பட்டு சான்றளிக்கப்படுகின்றன.
  • நீண்டகால திறன் மேம்பாட்டினை இளைஞர்களுக்கு அளிப்பதில் ஒரே சீரான பெயர்களையும், தரத்தையும் பராமரித்தல்.
  • 29 மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள 631 மாவட்டங்களுக்கு 719 பிரதமர் திறன் மேம்பாட்டு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இவை 521 நாடாளுமன்ற தொகுதிகளில் அமைந்திருக்கும்.
  • தெலங்கானாவின் ஹைதராபாதில் முதலாவது தேசிய திறன் பயிற்சி நிறுவனத்துக்கு அமைச்சகம் அடிக்கல் நாட்டியது.
  • நொய்டா, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பத்து தேசிய திறன்பயிற்சி நிறுவனங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.  திருச்சி, சிம்லா, ஹைதராபாத் உள்ளிட்ட எட்டு தேசிய திறன்பயிற்சி நிறுவனங்கள் மாநில அரசுகள் வழங்கிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
  • வழக்கமான கைவினைஞர்கள் பயிற்சித் திட்டங்கள், கைவினை ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
  • அலுவலக நிர்வாகம், மின்னணுவியல், கட்டடக்கலை, கணினி உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாடங்களில் நீண்டகால பயிற்சிகள் தற்போது வழங்கப்படுகின்றன.
  • சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மாதிரியில் இந்தியாவின் நான்கு மண்டலங்களில் அதிநவீன சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
  • பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, அதன் இரண்டாவது திட்டம் 2016 முதல், 2020 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் 250-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வகைகளில் பயிற்சி அளிக்கிறது.
  • 2018-ல் அரசின் இந்த மாபெரும் திட்டம் 10 லட்சத்திற்கும் கூடுதலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது.
  • 2018 முதல் இந்தத் திட்டத்தில் சான்றளிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான தனிநபர் காப்பீடு வழங்கப்படுகிறது.
  • தொழிலில் முன் அனுபவம் அல்லது முறைசாரா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றளிக்கும் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு, 8 லட்சம் பேருக்கு பயனளித்துள்ளது.
  • கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ், 2018 டிசம்பர் 13 வரை ஒரு கோடியே 4 லட்சம் பயிற்சிகள்,  தேசிய திறன்மேம்பாட்டு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டுள்ளன.  
  • நீண்டகால பயிற்சி கட்டமைப்பு திட்டத்தின்கீழ், நாட்டில் 15,042 தொழில் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
  • தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கும் மதிப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஆறு மாநிலங்களில் இரட்டை பயிற்சி திட்டத்தின்கீழ், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் அமைச்சகம் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
  • சங்கல்ப் என்ற பயிற்சித் திட்டத்தில், 2018 ஜனவரியில் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் சேர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.  இவற்றுக்கான நிதி வழங்குதல் நடைமுறை தொடங்கியுள்ளது.
  • தொழிலியல் மதிப்புக் கூட்டுதலுக்கான  திறன் வலுப்படுத்துதல் திட்டம், ஸ்ட்ரைவ் என்பது ரூ.2200 கோடி மதிப்பிலான மத்திய அரசு திட்டம், இதில் பாதித் தொகை உலகவங்கியிடமிருந்து உதவியாகப் பெறப்படுகிறது.
  • தொழில் துறையில் தொழில் கல்விக்கான தேசிய சபை, என்.சி.வி.டி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை, என்.எஸ்.டி.ஏ ஆகியவை இணைக்கப்பட்டு தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சி சபை, என்.சி.வி.ஈ.டி. என்ற பெயரில் செயல்படுகிறது.
  • முதியோர் கல்வி தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் திட்டமான மக்கள் கல்வி அமைப்பு திட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் அமைச்சகத்துக்கு 2018 ஜூலை 2 ஆம் தேதி மாற்றப்பட்டது.  தற்போது 27 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 271 மக்கள் கல்வி அமைப்புகள் செயல்படுகின்றன.
  • மக்கள் கல்வி அமைப்புகள் பயனாளிகளின் வீடுகளிலேயே திறன் பயிற்சி திட்டங்களை அளித்து வருகிறது.
  • இதர அமைச்சகங்களுடன் விவசாயிகளுக்கான திறன் இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை இந்த அமைச்சகம் ஏற்படுத்தி வருகிறது. 
  • நான்கு மாநிலங்களில் சுமார் 50,000 கொத்தனார்களுக்கு பயிற்சி அளிப்பதற்கென திறன் இந்தியா திட்டம், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கைகோர்த்துள்ளது.
  • முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக முன்னேறுவதற்கான திறன் உருவாக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
  • 2018 பணி பயில்வோர் சட்டத்துக்கான நடைமுறை கட்டமைப்பை அமைச்சகம் தொடங்கியுள்ளது.  இந்த கட்டமைப்பு தேசிய மற்றும் மாநில நிலைகளில் ஆர்வமுள்ள அமைப்புகளின் பங்குகள் மற்றும் கடமைகளை பட்டியலிட்டு, செயல்முறை வழிகாட்டியாகப் பயன்படுகிறது.
  • தலைமைப் பயிற்சியாளர் நெறிமுறைகள் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியன கற்பித்தல் நடைமுறையில் வலு சேர்க்க உதவுகின்றன.
  • திறன் இந்தியா, வலைதளம் திறன்பெற்ற நபர்கள் விவரம், அவர்களது பயிற்சித் திட்டம், வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.
  • 2018 ஏப்ரல் முதல், நவம்பர் வரை 24 மாநிலங்களைச் சேர்ந்த 250 மாவட்டங்களில் அமைச்சகம் சுமார் 400 வேலைவாய்ப்பு மேளாக்களை நடத்தியது.
  • எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு உகந்த பாடத்திட்டங்களை உருவாக்க நாஸ்காம், எஸ்.ஏ.பி, ஐ.பி.எம், அடோப் ஆகிய நிறுவனங்களுடன் அமைச்சகம் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.
  • ஸ்கில் ஷாத்தி திட்டத்தின்கீழ், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையினரின் தேவைகளை கருத்தில் கொண்டு பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • திறன் இந்தியா திட்டத்தின்கீழ், கலந்தாலோசனை மாதிரி மூலம் இளைஞர்களுக்கு மரபுசாராத தொழில்களில் பயிற்சி வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு அதிக கவனம் செலுத்தும் சிறப்புத் திட்டங்கள், பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ளன.  ப்ரூ திட்டம், கத்காரி பழங்குடியினர் திட்டம், இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்களில் திறன்பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.
  • பாரம்பரிய திறன்மிக்க ஃபிலிகிரி கைவினைஞர்கள் போன்றோரை சுயசார்பு பெற்றவர்களாக மாற்றுவதற்கான திறன் மற்றும் வசதிகள் மையம் 2018 ஏப்ரலில் கட்டாக்கில் தொடங்கப்பட்டது.
  • தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அமைச்சகம், ஜப்பான் அரசுடன் செய்து கொண்டுள்ளது.
  • இந்திய அணி, ரஷ்யாவில் காஸான் என்ற இடத்தில் நடைபெறவுள்ள 45-வது உலக திறன்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்க தயாராக உள்ளது.
  • நாட்டின் மிகப் பெரிய திறன் போட்டியான இந்தியா-திறன்கள் 2018 புதுதில்லியில் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.  27 மாநிலங்களைச் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 46 வகை திறன்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
  • 28 நாடுகள் பங்கேற்கும் யூரோ திறன்கள், 2018 போட்டிகளில் இந்தியா விருந்தினர் நாடாக பங்கேற்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

*****

விகீ/சிஜே/க