புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் துரித மதிப்பீடுகள் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்துக்கான பயன்-அடிப்படைக் குறியீடு ( அடிப்படை 2011-12=100)

Posted On: 12 JUN 2020 5:30PM by PIB Chennai

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) துரித மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ஆம் தேதி ( அல்லது முந்தைய வேலை நாளில்) 6 வார இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரவுகளை ஆதார முகமைகள் பெற்று அவற்றைத் தொகுக்கின்றன.

கொவிட்-19 பெருந்தொற்று பரவிவருவதைக் கட்டுப்படுத்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் 2020 மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து இயங்கவில்லை. இந்த முடக்கம், 2020 ஏப்ரல் மாதத்தில், நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2020 ஏப்ரல் மாத ஐஐபி குறியீட்டை, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இராது. வரும் மாதங்களில், ஐஐபியில் மாற்றங்களை நோக்கலாம். ஐஐபியின் திருத்தக் கொள்கையின்படி, இந்த துரித மதிப்பீடுகள் , பிந்தைய வெளியீடுகளில் திருத்தம் செய்யப்படும்.

2020 ஏப்ரல் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் துரித மதிப்பீடுகள், 2011-12 அடிப்படையில் 56.3 ஆக இருந்தது. 2020 ஏப்ரல் மாதத்தில், சுரங்கத்தொழில், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான ஐஐபி குறியீடுகள் முறையே, 78.3, 45.1 மற்றும் 126.1 ஆக இருந்தது



(Release ID: 1631196) Visitor Counter : 195


Read this release in: Telugu , English , Urdu , Hindi