புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

தொழில்துறை உற்பத்தியில் 2018 ஜனவரி மாதத்திற்கான உத்தேச குறியீடு மற்றும் பயன்பாடு அடிப்படையிலான குறியீடு (அடிப்படை 2011-12=100)

Posted On: 12 MAR 2018 5:30PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் 2011-12 அடிப்படையில் 2018 ஜனவரி மாதத்திற்கான தொழில் துறை உத்தேச குறியீட்டை வெளியிட்டுள்ளது.  14 நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொழில் துறை உற்பத்தி குறியீடு தரப்பட்டுள்ளது. 

2.    2018 ஜனவரி மாதத்திற்கான பொது குறியீடு 132.3 ஆக உள்ளது.  இது 2017 ஜனவரி மாதத்தை ஒப்பிடும் போது 7.5 சதவீதம் அதிகமாகும்.  2017-18 ஏப்ரல் – ஜனவரி காலக்கட்டத்திற்கான ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 4.1 சதவீதமாக அதிகம் உள்ளது.

3.    சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்திக்கான குறியீடு 2018 ஜனவரி மாதத்தில் முறையே 114.5, 133.8 மற்றும் 149.5 ஆக உள்ளது. இத்துறைகளில் 2017 ஜனவரி மாதத்தை ஒப்பிடும் போது, உற்பத்தி வளர்ச்சி முறையே 0.1 சதவீதம், 8.7 சதவீதம் மற்றும் 7.6 சதவீதமாக உள்ளது.  (அறிக்கை–I) 2017-18 ஏப்ரல் – ஜனவரி காலக்கட்டத்திற்கான ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இத்துறைகளில் முறையே 2.5 சதவீதம், 4.3 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் அதிகமாக உள்ளது. 

4.    தொழிற்சாலைகளை பொறுத்த வரை 23 தொழில் குழுமங்களில் 16 குழுமங்களின் உற்பத்தி 2018 ஜனவரி மாதத்தை ஒப்பிடும் போது இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக வளர்ச்சியை  கண்டுள்ளன. (அறிக்கை–II)  தொழில் குழுமங்களில் போக்குவரத்து உதிரிபாகங்கள் உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக  33.1 சதவீத வளர்ச்சியும், இதற்கு அடுத்தபடியில் அறைக்கலன் உற்பத்தியில் 26.6 சதவீத வளர்ச்சி மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியில் 26.6 சதவீத வளர்ச்சியும் காணப்படுகின்றன.  அதேவேளையில் புகையிலைப் பொருட்கள் உற்பத்தியில் அதிகபட்ச பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இத்துறையில் -46.5 சதவீத பின்னடைவும், இதற்கு அடுத்தபடியாக மற்ற உற்பத்தித் துறைகளில் -32.4 சதவீத பின்னடைவு  மற்றும் அச்சிடுதல் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஊடக மறு உற்பத்தித்துறையில் -13.2 சதவீத பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.

5.    பயன்பாடு அடிப்படையிலான பகுப்பாய்வின் படி, 2017 ஜனவரி மாதத்தை விட, 2018 ஜனவரி மாதத்தில் முதன்மை சரக்கு பயன்பாட்டில் 5.8 சதவீத வளர்ச்சியும், மூலதனப் பொருட்கள் பயன்பாட்டு வளர்ச்சி 14.6 சதவீதமும் இடையீடு சரக்கு பயன்பாட்டு வளர்ச்சி 4.9 சதவீதமும் மற்றும் கட்டிடப்பணி மற்றும் உட்கட்டமைப்புப் பொருட்கள் பயன்பாட்டின் வளர்ச்சி 6.8 சதவீதமாகவும் உள்ளது (அறிக்கை–III). நுகர்வோர் நீடித்த மற்றும் நுகர்வோர்  நீடிப்பற்ற பயன்பாட்டு வளர்ச்சி முறையே 8 சதவீதம் மற்றும் 10.5 சதவீதமாக உள்ளது.



(Release ID: 1524025) Visitor Counter : 171


Read this release in: English